866
குருமண்வெளி ரவி.
ஒக்டோபர் மாதமதை
ஒதுக்கியே தந்தார்கள்
வாசிப்பு பழக்கத்தை
வளத்தெடுப்பதற்காய்
வாசிப்பால் உயர்ந்தவரை
வரலாறு கூற நிற்கும்
சிறையிலே வாசித்தார்
தூக்கம் இல்லாமல் வாசித்தார்
தூக்கு மேடையிலே வாசித்தார்
அறுவைச் சிகிச்சை முன் வாசித்தார்
அதனாலே உயர்ந்தார்கள்
வாழ்க்கையிலே சிறந்தார்கள்
புரட்டப் புரட்ட
புதிய செய்திகளைத் தரும்
புத்தகங்கள் படித்துத்தான்
புரட்சிகள் செய்தனர்
புரட்சிகள் ஆட்சிகளை
புரட்டியது வரலாறு
புத்தியை வளர்த்திடவும்
புதுமைகள் படைத்திடவும்
வாசிப்பை எப்போதும்
வளப்படுத்திடுவோம் வாசிப்பு மாதம்