பூவெலிகட
விந்தை உலகம்
இன்றோ
விஞ்ஞானத்தால்
ஏற்ற இன்பம்
காண முனைகிறது
அமைதி உலகம்
அன்றோ
சாத்வீக நெறியால்
மெய்ஞானப் பேரின்பம் கண்டு
நிம்மதி நீடித்த ஆயுள்
பெற்றே மானசிக சுவனமாக
திளைத்து மகிழ்ந்தது.
எதுகை மோனை போல்
ஆணினமும் பெண்ணினமும்
ஒருவரை மற்றவர் வெறுக்காது
பெருமிதமாக கருதும் நிலையால்
பணிவன்பு மேலோங்கி
உள்ளங்கள் பூரித்திருந்தன.
குழந்தைகள் தெய்வீக அன்பால்
வியப்பாக பார்த்தனர் அன்று
ஆனால் இன்றோ
சுமைகளாகி
வயதை மீறிய அழுத்தம்
கொடுக்கும் அவலம்
எதிர்காலம் நலவாக வேண்டும்
என்ற பேராசையில்
பெண்கள் கண்ணியம்
கட்டுப்பாடு இழக்கின்றனர்
ஆண்களின் ஆளுமை
மன இச்சைகளின்
ஆளுகையானதால்
மனிதனோ,
மறுமை மரணம்
மறந்த நிலையில்
பேராசை கொந்தளிப்பால்
உலகம் அநித்தியம்
என்பதை மறந்து
உழன்றழிகிறான்…
மீண்டும் உலகம்
நல்லெழுச்சி பெறாதா
சாத்வீக நெறிமுறை
தளைத்தோங்காதா?
ஏக்கத்துடன் விடை தேடுகிறது
என் எழுத்து
ஒளிப்பாதை மருளானதே!
827
previous post