870
வழிப்பாதை வழிகாட்டும்
வழிகாட்டிகள் திசைகாட்டிகள்
வழியில்லை என்ற போதும்
வழியமைக்க வழிகாட்டும் குரு
மனதில் ஒளிஉண்டு தெளிவுண்டு
மனதெல்லாம் மாணவர் சிந்தை
மனம் விட்டு கதைத்து மாணவர்
மனப்பாரம் நீங்க வழி சொல்வார்
வழி சொன்னவர் முகத்தை தினம்
வழிபடுவோம் மனதிருத்தி
வழிபடுவோம் இறைவனிடமும்
வழிதந்தவர் வாழ்வு சிறக்க