893
கலவரத்தையும்
மலர் வனத்தையும்
ஒருசேர உணரும்
நிலவர நிலையெனது
புழுதி மண் உன்
புன்னகையில்
கனவும் கூட
வாழ்ந்த அனுபவமாய்
இதயம் இன்னும்
எண்ணியபடி
இருபதுக்குள்தான்
இயங்குகிறது
இடி முழக்கங்களுக்குள்
இருப்பான பின்னும்
இலையுதிர் காலமும்
வசந்தகாலமாய்
நீ வந்து போகும்
வழியெங்கும்
உன் செருக்கு நடை
என் விழி வீதியில்
மழையுடன்
கடந்து செல்லும்
மயக்கம் என்னுள்
இன்னும் நம்புவது
ஏமாற்றமாக இருந்தாலும்
அறிவற்று அலைந்தபடி
பிடித்ததை பின்தொடர்கிறது
பித்துப் பிடித்து மனம்