1. கிரீன்லாந்து – Greenland:
கிரீன்லாந்து ஆர்டிக் பெருங்கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட கனடாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்து உள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய தீவு ஆகும். இந்த தீவில் மனிதர்கள் வாழ்கின்றனர். பனிப்படலம் மற்றும் கனிம வளம் மிகுந்த தீவு இது.
2. நியூ கினியா – New Guinea:
நியூ கினியா தீவு அவுஸ்திரேலிய கண்டத்தின் அருகில் உள்ளது. இது அவுஸ்திரேலிய கண்டத்தைச் சார்ந்தது. ஒரே தீவு என்றாலும் பப்புவா, மேற்கு பப்புவா என இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தீவுக்கு என பழங்கால வரலாறு உள்ளதாம்.
3. போர்னியோ – Borneo:
போர்னியோ உலகின் மூன்றாவது பெரிய தீவு. இந்த தீவை மலேசியா, இந்தோனேசியா, புரூணை ஆகிய நாடுகள் ஆளுமையை பகிர்ந்து கொண்டு உள்ளது. இந்த தீவு பழமையான மலைப்பகுதிகளை கொண்டு உள்ளது. மேலும் உலகின் பழமையான தாவரங்களும், விலங்குகளும் இந்த தீவில் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.
4. மடகஸ்கர் – Madagascar:
மடகஸ்கர் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆபிரிக்க கண்டத்தை ஒட்டி அமைந்து உள்ளது. இந்த தீவு குமரிக்கண்டத்தில் இருந்து பிரிந்து சென்று இருக்கலாம் என இன்று வரை வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் ஆதாரத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரி மன்னன் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற தேவவாக்கு விலங்கு என்ற தேவாங்கு இனம் இங்கு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. தேவாங்கு பொதுவாக தமிழகம் மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படும். அப்படிப்பட்ட லெமூர் வகை இனம் கண்டங்களின் இடப்பெயர்ச்சியின் போது இடம்பெயர்ந்து இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
5. பாஃபின் தீவு – Baffin Island:
பாஃபின் தீவு கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது. பனிக்கட்டி பாறைகள் கிரீன்லாந்து, பாப்பின் தீவுகளில் முதலில் உருவாகி இருக்காலம் என கண்டறியப்பட்டு உள்ளது. இது கனடாவின் பெரிய தீவு என அழைக்கப்படுகிறது. உலகின் ஐந்தாவது பெரிய தீவு இதுவாகும்.