கலைஒளி முத்தையா பிள்ளை அறக்கட்டளையின் சார்பில் பேராசான் மு. நித்தியானந்தன், எச். எச். விக்கிரமசிங்க, பேராதனை பல்கலைகழக சிரேஷ்ட விரிவுரையாளர் செல்லதுரை சுதர்ஷன் ஆகியோர் 2024இல் பதிப்பித்த பீ. மரியதாஸ் எழுதிய மலையகம் இங்கிருந்து எங்கே?, சி.வி. வேலுப்பிள்ளை 1962இல் எழுதிய எல்லைப்புறம், பதுளை வ. ஞானபண்டிதன் 84 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கதிர்காம திருமுருகன், சிவபாக்கியம் குமாரவேல் எழுதிய லெச்சுமி தந்த வாய்மொழி இலக்கியம், சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய விஸ்மாஜினியின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகிய ஐந்து நூல்களும் சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளன. தமிழகத்தின் முன்னணி எழுத்தாளரும் எழிலினி (Emerald Publishers) பதிப்பக உரிமையாளருமான கோ.ஒளிவண்ணன் வழிநடத்தலில் தமிழ்நாடு சென்னை எம்ஜிஆர் ஜானகி அம்மா கலைக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் குமார் ராஜேந்திரன் தலைமையில் வெளியீட்டாளர் எச் எச் விக்கிரமசிங்க நூலினை வெளியிட்டு வைக்கின்றார்.
இந்த நிகழ்வில் இலங்கையில் இருந்து இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் மற்றும் தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோர் எழுத்தாளர் எச். எச். விக்கிரமசிங்கவுடன் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு அரசு ஜனவரி 11, 12ஆம் திகதிகளில் சென்னையில் நடத்தும் அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் எச். எச். விக்கிரமசிங்க கலைஒளி முத்தையா பிள்ளை அறக்கட்டளையின் சகல பதிப்புகளையும் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் வைபவ ரீதியாக கையளிப்பார்.