ஆத்வி சேஷ் நடிக்கும் ‘டகோயிட்’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக மிருணாள் தாகூர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.ஷானில் டியோ இயக்கத்தில் ஆத்வி சேஷ் நடித்து வரும் படம் ‘டகோயிட்’ (DACOIT)’. இதில் நாயகியாக ஸ்ருதிஹாசனை வைத்து முதற்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றது. இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நாயகி குளறுபடியால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது மிருணாள் தாகூரை வைத்து வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.