இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தாலும் அவர்களில் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா.
தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பையும் பெற்ற வசுந்தரா, செலக்டிவான படங்களில் நல்ல நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் இந்த வருடத்தில் கண்ணை நம்பாதே, தலைக்கூத்தல் என இரண்டு படங்களிலும் மாடர்ன் லவ் சென்னை என்கிற வெப் சீரிஸிலும் நடித்துள்ள வசுந்தரா மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
அது மட்டுமல்ல, இதுவரை செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்த வசுந்தரா, இனி படங்களை தேர்வு செய்வதில் தானே வகுத்துக் கொண்டுள்ள விதிகளை கொஞ்சம் தளர்த்தி புதிய பாதையில் பயணிக்க போகிறேன் என்கிறார்.