வடக்கு சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் 2,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட 445 கல்லறைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது பண்டைய காலத்தின் இறுதி சடங்கு மற்றும் கலாசார நடைமுறைகள் பற்றி ஆராய சான்றாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
ஷாங்சி மாகாண தொல்லியல் கழகத்தின் தலைமையில் அகழ்வாராய்ச்சி பணிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
டுவான் ஷுவாங்லாங் இன்ஸ்டிடியூட்டின் அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளரின் கூற்றுப்படி, கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகள் சிறியது முதல் பெரியது வரை காணப்படுகின்றன. வெண்கலப் பாத்திரங்கள், இரும்புப் பாத்திரங்கள், மட்பாண்டங்கள், எலும்புப் பொருட்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த கல்லறைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த கலைப்பொருட்கள் இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் செழித்து வளர்ந்த பண்டைய சீன சமூகங்களின் இறுதி சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை ஆராய்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த கல்லறைகளின் அமைப்பு, கட்டுமானம் மற்றும் உள்ளடக்கங்களை உன்னிப்பாக ஆய்வு செய்ய உள்ளனர்.