நாம் வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்டூல்கள், கதிரைகளின் நடுவில் ஒரு துளை இருக்கும். இந்த துளைகள் உண்மையில் எதற்காக போட்டப்படுகிறது என்பது தெரியுமா?
பிளாஸ்டிக் கதிரைகள், -ஸ்டூல்களின் நடுவில் இருக்கும் துளை அதன் நிலைத்தன்மைக்காக வடிவமைக்கப்படுகிறது. இதில் அமரும், அல்லது பயன்படுத்தும் நபருக்கான பாதுகாப்பு அம்சமாக இருக்கிறது. யாராவது இதன் மீது அமர்ந்தால், சமநிலை இல்லாமல் உடைந்து கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த துளைகள் போடப்படுகின்றன.
இந்த துளைகள் பெரும்பாலும் வட்ட வடிவில் தான் இருக்கின்றன. சதுரமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ இருந்தால், நாம் அமரும் போது அழுத்தம் அதிகரிக்கலாம். இதனால் இந்த கதிரைகளில் விரிசல்கள் விழலாம். இதுவும் இந்த கதிரைகள் உடையும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
இந்த வட்டவடிவ துளைகள் இருந்தால் நாம் அமரும் போது சமநிலையாக இருக்கும்.
மேலும் இந்த கதிரைகளை நாம் ஒன்றன் மீது ஒன்றாக தான் அடுக்குவோம். இந்த துளைகள் மத்தியில் இல்லை யென்றால், பிரிப்பது கடினமாகும். மேலும் ஒரு கதிரைக்கும், அடுத்த கதிரைக்கும் இடையில் காற்றழுத்தம் அதிகரித்துவிடும்.
இந்த துளைகள் இருந்தால், கதிரைகளை எளிதாக பிரிக்கலாம்.