10
சோலை ஓரம் ஓடையொன்று
சலசல வென்று ஓடுதாம்
காலை ஒன்று தூக்கிகிட்டு
கொக்கு ஒன்று நிற்குதாம்!
வேளை பார்த்து வர்ற மீனை
விரைந்து வாயில் பிடித்திடவே
வெள்ளைக் கொக்கு பார்க்குதாம்
கொள்ளை ஆசை கொண்டதாம்!
நாளைய உணவு வேணுமென்று
சோலை வழியே போன வேடன்
வெள்ளைக் கொக்ைகப் பார்த்துட்டான்
கொல்ல மனசு துணிஞ்சிட்டான்!
தோட்டாவைத்தான் போட்டுட்டான்
துப்பாக்கியைத் தூக்கிட்டான்
வேட்டுச் சத்தம் கேட்டதாம்
வெள்ளைக் கொக்கு பறந்ததாம்!