1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி எட்டயபுரத்தில் பிறந்தார் பாரதியார். இவர் சின்னச் சாமி ஐயர், இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பாரதியார் இனிமையான பாடல்களை இயற்றியுள்ளார். முண்டாசுக் கவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு சிறந்த கவிஞர்.
அவர் எல்லோருடனும் அன்பாகப் பழகுவார். இவரது இளமைப் பெயர் சுப்பிரமணியம் ஆகும். எட்டய புரத்து சமஸ்தானப் புலவர்கள் “பாரதி” எனும் பட்டத்தை இவருக்கு வழங்கினர்.
பாரதி தனது 14ஆவது வயதில் 7 வயது நிரம்பிய செல்லம்மாவை திருமணம் செய்தார். பரந்த உள்ளம், புதுமை எண்ணம், தெளிந்த அறிவு, இலட்சியப் பற்று முதலான பண்புகளைக் கொண்டவர். இவர் இயற்றிய பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு முதலானவை பிரசித்தி பெற்ற கவிதைகளாகும். பெண் விடுதலை வேண்டி பல பாடல்கள் பாடினார். இவர் புரட்டாதி மாதம் 12 ஆம் திகதி 39ஆவது வயதில் மறைந்தார்.
எம்.எப். சாலிஹா தரம் 5A, பதியுதீன் மஹ்முத் ம. கல்லூரி, கண்டி.