இலங்கையில் பாலுற்பத்தித் துறையில் முன்னணி நாமமாகத் திகழ்ந்து வருகின்ற Pelwatte Dairy Industries Ltd, பாதுகாப்பு மற்றும் சூழல் நிலைபேற்றியல் கலாசாரத்தை ஊக்குவிப்பதில் தனது வலுப்படுத்தப்பட்ட அர்ப்பணிப்பைக் காண்பிக்கும் வகையில், பத்திரிகையாளர் மாநாடொன்றை வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. பாதுகாப்பான பணிச்சூழலை வளர்த்து, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் உள்நாட்டு மற்றும் சர்வதேச தராதரங்களுடன் ஒன்றிணையும் வகையில் தனது தொழிற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்வதில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இப்பத்திரிகையாளர் மாநாட்டு நிகழ்வின் போது வலியுறுத்தப்பட்டது.
தனது அதியுச்ச பாதுகாப்பு மூலோபாயத்தின் ஒரு அங்கமாக, தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (Occupational Health and Safety – OH&S) குறித்த சர்வதேச தரநடைமுறையான ISO 45001 இனை Pelwatte Dairy உள்வாங்கியுள்ளது. இச்சான்று அங்கீகாரமானது ஊழியர்களை பாதுகாப்பினை மேம்படுத்தி, பணியகத்தில் எழுகின்ற ஆபத்துக்களைக் குறைத்து மற்றும் சிறப்பான, பாதுகாப்பான பணி நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்கான கட்டமைப்பினை ஸ்தாபிக்கின்றது. தலைமைத்துவம் மற்றும் ஊழியர் பங்கேற்பினை ஊக்குவிப்பதனூடாக பாதுகாப்பான கலாசாரமொன்றை ஊக்குவித்தல், தொழிற்சாலை கட்டளைச் சட்டம் போன்ற உள்நாட்டுச் சட்டங்கள், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (International Labour Organization – ILO) போன்றவற்றின் சர்வதேச தர நடைமுறைகள் ஆகியவற்றுடன் சட்ட மற்றும் ஒழுங்குமுறை இணக்கப்பாட்டை உறுதி செய்தல் ஆகியன இத்தரநடைமுறையின் கீழான பிரதான நோக்கங்களாகக் காணப்படுகின்றன.