தொழில்நுட்ப வளர்ச்சி இன்று நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது. சில ஆண்டுகளுக்கு முன் தொலைபேசிகள் மிகப் பெரியவையாகவும் வெகு குறைவான வசதிகள் கொண்டவையாகவும் இருந்தன. ஆனால், தற்போது ஸ்மார்ட்போன்கள் நம்முடைய கைபேசியில் இணையம், கேம்கள், கல்வி மற்றும் சமூக ஊடகங்களை கொண்டுவருகின்றன. கையடக்கத் தொலைபேசிகள் மூலம் நாமெல்லாம் இன்றைய தகவல் யுகத்தில் இணைந்துள்ளோம்.
கணினிகள் மற்றும் இணையம் மூலம் உலகம் முழுவதும் தகவல்களை பெறுவதும் பகிர்வதும் எளிதாகியுள்ளது. இணையத்தின் உதவியால், உலகின் எந்த மூலையில் இருந்தும் நமக்கு தேவையான தகவல்களை நமக்குத் தேவையான நேரத்தில் பெற முடிகின்றது. இது நாம் வேலை செய்வது, விளையாடுவது மற்றும் கற்றுக்கொள்வது போன்ற அனைத்து விடயங்களையும் மாற்றி விடுகிறது.
ரோபோடிக்ஸ் மற்றும் ஒட்டோமேஷன் தொழில்நுட்பம் தொழில்களில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தி, மனித உழைப்பை குறைக்கின்றன. ரோபோக்கள் மற்றும் ஒட்டோமேஷன் மின்னணு சாதனங்கள் தொழில்களில் மிகுந்த பொருட்செலவை மிச்சம் செய்யும் வகையில் செயற்படுகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் தொழில்களில் அதிக செயற்றிறனை கொண்டு வருகின்றன.
மேலும், விரைவான போக்குவரத்து மற்றும் உயர் தொழில்நுட்ப மருத்துவ சாதனங்கள் நம்முடைய வாழ்வில் மிகப் பெரிய முன்னேற்றங்களை தருகின்றன. உயர் தொழில்நுட்ப மருத்துவ சாதனங்கள் நோய்களை மிக விரைவாகக் கண்டறியவும் முறையாக சிகிச்சை அளிக்கவும் உதவுகின்றன. இதனால் மருத்துவம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
கல்வியிலும் தொழில்நுட்பம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்கள் உலகத்தின் எந்த மூலையிலும் இருந்து படிக்க முடிகின்றது. இது உலகின் எந்த மூலையிலும் உள்ள கல்வி வளங்களை நமக்குக் கிடைக்கச் செய்கின்றது.
மேலும், இச் செயற்பாடுகள் மூலம், தொழில்நுட்ப வளர்ச்சி நம் வாழ்க்கையை எளிதாக்கி, நம் உலகத்தை மாற்றி வருகிறது. கணினி கற்றல் (Machine Learning), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) போன்ற புதிய தொழில்நுட்பங்கள் உலகின் பல்வேறு துறைகளில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
ஸ்வேதா