ஹஜ் பெருநாள் தினமான நாளை மாலை ஐந்து மணிக்கு பிறை Tvயில் புதிய தொடராக ஆரம்பமாகும் பிறை வெளி நிகழ்ச்சியில் ஹஜ் தியாகத்தின் பேரின்பப் பெருவெளி எனும் தலைப்பில் உரையாடலும் கவிதை வாசிப்பும் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மூத்த கவிஞர்களான வைத்திய கலாநிதி தாஸீம் அஹமத், மேமன் கவி, புர்கான் பீ இப்திகார், கவிஞர் ஹஸீர், கவிஞர் நபீல், முல்லை முஸ்ரிபா ஆகியோர் கலந்து கொண்டு ஹஜ் பெருநாள், ஹஜ் கிரியைகள், ஊர்ப்பெருநாள், பால்ய கால நினைவுகளென அனுபவங்களை மீட்டுவதுடன் கவிதைகளும் வாசிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வைப் பிறை ரீவி பொறுப்பாளர் றிஸ்வான் தயாரித்திருக்கிறார். பிறைவெளி முன்வைப்பாளர் முல்லை முஸ்ரிபா தொகுத்தளிக்கிறார்.