Home » கிருத்திகா உதயநிதி – ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு

கிருத்திகா உதயநிதி – ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு

by Damith Pushpika
June 9, 2024 6:46 am 0 comment

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் கிருத்திகா உதயநிதி. இவர் இயக்கத்தில் 2022-ம் ஆண்டு வெளியான ‘பேப்பர் ராக்கெட்’ வெப்சீரிஸ் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கிறார். நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் டீசர், ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இதற்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில் 1964-ம் ஆண்டு இதே தலைப்பில் படம் வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

@2025 All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division