முதியோர், பெரியோர் வரலாறுகள் நமக்கெலாம்
முன் மாதிரியாய் வழிகாட்டி நிற்பவை என்பதுணர்க
சீரிய வழியில் பெரியோர் நடந்த வாழ்வு முறைகள்
சீர்மையாய் நமக்குப் புலப்படத்தான் அமைந்துளவே
ஜெகமெங்கும் வாழ்ந்த பெரியோரின் வாழ்வு முறையில்
‘ஜெயம்’ பெறும் நோக்கில் அவ்வழியில் வாழ்வை அமைத்திடுவோம்
கற்றறிந்த பண்டிதர் வழி செல்லக் கல்வி அவசியமே
காணும் பாமரரில் பெரியோர் நம்முன் உளர்
ஏழை எளியோர்க்கு உதவும் பாமரர் வழி செல்தல் பெருமையே
கோழைத்தனம் அகற்றிப் பண்பாடுள்ளோர் வழியை உணர்வோம்
சீமான் போல் பணம் செலவழிக்கும் பொதுச்சேவை முடியாவிடினும்
சிறுமைத் தனத்தில் உடல் ரீதியில் உழைத்துப் பொதுச்சேவை ஆற்றலாம்
பணம் செலவிட்டுப் பொதுச் சேவை ஆற்றுதல் ஒரு வழி
பண்பாட்டுடன் உடல் உழைப்பால் பொதுச்சேவை காணல் ஒருமுறை
வித்தியாசமான நடைமுறை பேணப் படினும்
வெவ்வேறு திசையன்று ஒரே திசையில் சேவை அமைந்திடும்
மனப்பாங்கில் உறுதிப்பாடும் தைரியமும் இருந்திடின்
மனித வாழ்வில் உயர்வைக் காணல் உறுதியே!