1870ஆம் ஆண்டு அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாகாணத்தில் முதன் முதலில் வெண்ணெய் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1870ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டுவிட்டாலும், இவை பிரபலமானதென்னவோ 1911ஆம் ஆண்டு நடந்த Iowa State Fairஇல் தான். அந்தப் பொருட்காட்சியில் John K. Daniels என்ற சிற்பி வெண்ணெயில் உருவாக்கிய ஒரு மாடு சிற்பம் தான், அவருக்கும் இந்தப் புகழைப் பெற்றுத்தந்தது.
இப்போது அமெரிக்கா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளிலும் இந்த வெண்ணெய் சிற்பக்கலை பிரபலமாக இருக்கிறது. வெண்ணெய் சிற்பங்களைச் செய்யும் சிற்பிகள், தினமும் 50 டிகிரி பரனைட் வெப்பநிலை கொண்ட குளிர்சாதனப்பெட்டியில் வேலை செய்தாகவேண்டிய கட்டாயம். அவர்கள் விடும் மூச்சு, விரலில் இருக்கும் சூடு கூட சிற்பங்களை உருகவைத்துவிடும் அபாயமிருந்தாலும், இந்தச் சிற்பிகள் யாரும் வெண்ணெய் சிற்பக் கலையை கைவிடுவதாக இல்லை.