வரலாறு மாறி வருகின்றது. ஏற்படுத்தப்பட்டு வருகின்ற மாற்றங்கள் நேரடியாகவே மக்களால் உணரப்படுகின்றவை அல்ல. இலங்கை உலக புவி அரசியலில் நிலவுகின்ற மிகவும் முக்கியமான இடஅமைவினை மிகவும் நன்றாக ஈடுபடுத்திக்கொள்வதாகும். 1977 இன் பின்னர் இற்றைவரை ஒருசில விசேடமான தருணங்கள் தவிர்ந்ததாக உலகின் முன்னிலையில் ஏதோ ஒரு விதத்தில் அடிபணிதலே நிலவியது. குறிப்பாக 1977 இல் அதிகாரத்திற்கு வந்த ஜே. ஆர். ஜயவர்தனவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் முதலில் ஐக்கிய அமெரிக்காவிடம் மண்டியிட்டது. இந்தியாவையும் அப்போது நிலவிய சோவியத்திற்கு ஆதரவான பாசறையையும் எதிர்த்தது. அவருடைய ஆட்சிக்கு அது சக்கராயுதமாக மாறியவேளையில் இந்தியாவிடம் இணங்கிப் போனதுதான் வரலாறு.
இவ்விதமாக இலங்கை எனப்படுகின்ற மதிப்புமிக்க இராச்சியத்தின் அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்ட ஏறக்குறைய நான்கு தசாப்தகால வரலாறு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி அரசியல்ரீதியாக இணங்கிப்போதலை ஆரம்பித்து பின்னர் பொருளாதார ரீதியாக முற்றாகவே பிறரில் தங்கிவாழும் நிலைக்கு தள்ளப்பட்டது. நாட்டின் வெளிநாட்டுக் கடன் மூலமாகவே இது உறுதியாகின்றது, 1976 இல் 773.2 மில்லியன் டொலராக விளங்கிய மொத்த வெளிநாட்டுக் கடன் 1977 இல் 856. 1 மில்லியன் டொலர் வரை 82.9 மில்லியன் டொலரால் அதிகரித்தது. அது 1978 இல் 1114.3 டொலர்களாக அதிகரித்தது. ஒரு வருடத்திற்கான அதிகரிப்பு 158.2 மில்லியன் டொலராக அமைந்தது. 1980 அளவில் 1666.8 மில்லியன் டொலராக அதிகரித்தது. அதாவது 1976 இல் நிலவிய மொத்த வெளிநாட்டுக் கடனின் அளவு 773.2 மில்லியன் டொலர் இருமடங்கிற்கு மேலாக நான்கு வருடங்களுக்குள் அதிகரித்திருந்தது.
பொருளாதார ரீதியாக வெளிநாட்டவர் முன்னிலையில் மண்டியிடுவது என்பது ஏனைய துறைகளிலும் பிறரில் தங்கியிருக்கின்ற நிலையை நோக்கி வேகமாக தள்ளிவிடுவதாகும். 1948 இல் சுதந்திரம்பெற்ற பின்னர் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கங்கள் சம்பந்தமாக எந்தவிமான விமர்சனங்களும் நிலவலாம். எனினும் ஒருவிதமான சமநிலைவாய்ந்த வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள். அதனால் அமெரிக்காவை முதன்மையாகக்கொண்ட மேலைத்தேய பாசறைகள் போன்றே சோவியத் தேசத்தை முதன்மையாகக்கொண்ட கீழைத்தேய பாசறைகளிலிருந்தும் பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள இயலுமாயிற்று. உதாரணமாக எமது நாட்டுக்கு தொலைக்காட்சி சேவையைப் பெற்றுக்கொடுக்க 1965 – 1970 காலப்பகுதியில் டட்லி சேனாநாயக்க அரசாங்க காலத்தில் ஜேர்மனிய அரசாங்கம் முன்வந்தமையைக் குறிப்பிடலாம். அதனை அந்த அரசாங்கம் நிராகரித்தது. சிறிமா பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் சோவியத் தேசத்தில் இருந்து பாரிய அளவிலான கைத்தொழில்கள் கிடைத்தன. அதற்கு மேலதிகமாக மத்தியகிழக்கு நாடுகளுடன் மிகச்சிறந்த இராஜதந்திர ஒத்துழைப்பு நிலவியது.
அவையனைத்தையும் நாசமாக்கி, அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்திட்டம் ஜே.ஆயர். ஜயவர்தனவின் அரசாங்கக் காலத்திலேயே அமுலாக்கப்பட்டது. அண்டைநாடான இந்திய எதிர்ப்பு நடைமுறைகளை அமுலாக்கினார்கள். அதேவேளையில் 1977 ஒகஸ்ட், 1981 ஜுலை மாதத்தில் அபிவிருத்தி சபை தேர்தலின் போது யாழ். நூலகத்தை தீக்கிரையாக்கி அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஏ. அமிர்தலிங்கத்தைக்கூட பொலிஸார் கைதுசெய்தார்கள். அதன் பின்னர் 1983 கறுப்பு ஜுலை கட்டவிழ்த்து விடப்பட்டது. இவ்விதமாக இந்நாட்டின் தமிழ் மக்களுக்கு எதிராக அரச பயங்கரவாதம் தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டது. அதனூடாக நாட்டைப் பிரிக்கின்ற ஆயுதப் போராட்டமொன்று பலம்பொருந்தியவகையில் உருவாக்கப்பட்டது. அந்த இயக்கத்திற்கு இந்திய அனுசரணை அனைத்துத் துறைகளிலும் வழங்கப்படுகின்ற நிலைமை உருவாக்கப்பட்டது. அமெரிக்கா முன்வந்து ஜே. ஆர். ஜயவர்தனவின் ஆட்சியைப் பாதுகாக்கும் என்று எண்ணியே அவையனைத்தையும் செய்தார்கள்.
அழிவின் ஆரம்பம்
எனினும் ஜே. ஆர் ஜயவர்தன ஆட்சி 1977 ஜுலை மாதத்தில் தொடங்கி சரியாக ஒரு தசாப்த காலத்தில் 1987 ஜுலை மாதத்தில் இந்தியப் படையினரை இந்நாட்டுக்கு வரவழைத்துக்கொள்ளல் வரை அடிபணிந்தே வந்திருக்கிறது. இந்திய இராணுவத்தின் வருகைக்கு வழிசமைத்ததன் பின்னரே இந்நாட்டின் பிரிவனைவாத இயக்கங்களுக்கு அப்போது நிலவிய உலக அரசியலின் இரட்டை அதிகாரத்தின் கீழ் மேற்குலக நாடுகளிலிருந்து புத்துயிர் கிடைக்கத்தொடங்கியது.
அதற்கு மூன்று வருடங்களுக்குப் பின்னர் சோவியத் தேசத்தை முதன்மையாகக்கொண்ட பாசறை வீழ்ச்சியடைந்தது. புதிய உலக அரசியலின் கதவுகள் பற்றி சிறந்த புரிந்துணர்வுடன் செயலாற்ற இந்தியத் தலைவர்கள் அணிதிரண்டனர். அதன்படி உலக அரசியலில் புரட்சிகரமான வகிபாகத்துடன் இந்தியா சேர்ந்தது. அது அணுவாயுதப் பலத்தையும் கைப்பற்றிக்கொண்ட நாடு என்றவகையிலாகும். பொருளாதாரப் பலத்தை வேகமாக விருத்திசெய்து கொள்வதைப்போன்றே உலகில் யுத்த வல்லரசாகவும் முன்நோக்கி நகர்ந்ததன் மூலமாகும்.
அதேவேளையில் மறுபுறத்தில் 1970 தசாப்தத்தின் இறுதியிலும் 1980 தசாப்தத்தின் தொடக்கத்திலும் உறக்கத்திலிருந்த ஒரு ஜாம்பவானாக சீனா அழைக்கப்பட்டது. குறிப்பாக 1970 பின்னரைப்பகுதியில் இருந்து சீனா புரட்சிகரமான பொருளாதார மறுசீரமைப்பினைத் தொடங்கியது. ஒருமுகப்படுத்தப்பட்ட அரசியல் அதிகாரத் தத்துவத்தை பேணிவருகின்ற அதேவேளையில் பொருளாதாரம் தீவிரமாக தளர்த்தப்பட்டது. அது தேசிய திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கட்டங்கட்டமாக பொருளாதார வளர்ச்சி முன்நோக்கி நகர்த்தப்பட்டதோடு உறுதிநிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சோவியத் தேசத்தை முதன்மையாகக்கொண்ட அதிகாரப் பாசறைகள் வீழ்ச்சியடைந்த தருணத்தில் சீனா உறுதிநிலையை அடைந்திருந்தது. 1990 இன் ஆரம்ப காலகட்டத்தில் ஆசிய பொருளாதார நெருக்கடி தோன்றியது. அத்தருணத்தில் வேகமாக முன்னேறிவந்துகொண்டிருந்த “ஆசியப் புலிகள்” என அழைக்கப்பட்ட பல நாடுகள் வீழ்ச்சியடைந்தன. ஆனால் அத்தருணமாகும் வேளையில் சீனா உலகம்மீது உறுதியாக கால்பதித்து பயணிக்கத் தொடங்கியிருந்தது.
இலங்கையின் மதிப்புமிக்க ஆரம்பம்
நிகழ்காலத்தில் இந்தியாவும் சீனாவும் ஆசியாவில் மாத்திரமன்றி உலகின் இரண்டு ஜாம்பவான்களாக விளங்குகின்றன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கம் இதோ இந்த இரண்டு ஜாம்பவான்களுடன் செயலாற்றுகின்ற திறந்தநிலையிலான அரசியல் மற்றும் இராஜதந்திர இடப்பரப்பு இன்றளவில் உறுதியாகிவிட்டது. அடிபணிவதற்குப் பதிலாக மதிப்புமிக்க இராஜதந்திர அணுகுமுறை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டு விட்டது. முதலில் இந்தியாவிலும் இரண்டாவதாக சீனாவிலும் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி அந்த கௌரவத்தை பெற்றுக்கொடுத்தார். இவை வெறுமனே கூற்றுக்களன்றி விடயங்களை ஒவ்வொன்றாக கருத்திற்கொண்ட பின்னர் மேற்கொள்ளப்படுகின்ற ஊகமாகும்.
அந்த விடயங்கள் யாவை?
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இந்தியாவாக அமைந்தமை முழுஉலகினதும் கவனத்தை வென்றெடுத்த விடயமாகும். இலங்கையின் இடதுசாரி தலைவர் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுவதாகவே பொதுவில் மேற்குலக ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. குறிப்பாக 1987 ஆம் ஆண்டின் பின்னர் இந்நாட்டுத் தலைவர்கள் இந்தியாவுடன் பேணிவந்தது இராஜதந்திர உறவுகளையல்ல. ஒருவகையிலான அவாநிறைவினை வழங்குகின்ற உறவினையாகும். ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் அப்போதைய இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்திக்கிடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் திருகோணமலையின் எண்ணெய்க் குதங்கள் தொகுதி சம்பந்தமாகவும் துறைமுகங்கள் சம்பந்தமாகவும் தீர்மானம் மேற்கொள்வதற்கான இறுதி அதிகாரம் இந்தியாவிற்குை கொடுக்கப்பட்டது. இதிலிருந்து ஆரம்பித்த இந்த நிலைமை ரணில் விக்கிரமசிங்க வரை இடையறாமல் பேணிவரப்பட்டது. இதோ இந்த வரலாற்றினை மாற்றியமைக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆரம்ப நடவடிக்கையை எடுத்தார். இந்த எண்ணெய்க் குதங்கள் தொகுதியை முதலீட்டுக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வதாகும். 61 எண்ணெய்க் குதங்கள் சம்பந்தமாக இந்திய _இலங்கை பங்குடைமைக் கம்பெனியொன்றை நிறுவி 50% சொத்துவத்தின் அடிப்படையில் பகிர்ந்துகொண்டு இலாபத்தை பகிர்ந்துகொள்வதாகும்.
அத்துடன் எதிர்வரும் இரண்டு தசாப்தங்களில் உலகின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி கருத்திட்டங்கள் உலகின் முதலிடத்தைப் பெறும். அதன்போது காற்று விசையும், சூரிய சக்தியும் பிரதானமான தோற்றுவாயாக அமையும். அது தொடர்பில் சம்பூர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படுகின்ற முதலீட்டுக் கருத்திட்டத்திற்கிணங்க இலங்கைக்கு ஒரு அலகு மின்சாரம் 0.7 டொலருக்கு விற்பனை செய்யப்பட ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தற்போது மேற்படி அலகு 0.597 டொலருக்கு பெற்றுக்கொள்ள இணக்கம் பெறப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக இந்தியா இலங்கைக்கு வழங்கியிருந்த மில்லியன் கணக்கான டொலர் கடன் கொடையளிப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த ராஜதந்திர நடவடிக்கை பற்றி எதிர்க்கட்சி பாராமுகமாக இருப்பதைப்போன்றே பெரும்பாலான அரசியல் விமர்சகர்களும் பாராமுகமாக இருப்பதையும் விளங்கிக்கொள்ள முடியும். அவர்கள் கடந்த காலத்தில் “அநுரவிற்கு சர்வதேச தொடர்புகள் கிடையாது” என பிரசாரம் செய்தார்கள்.
அதன் பின்னர் கடந்த 17 ஆம் திகதி நிறைவுசெய்த சீனாவிற்கான மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயம் பற்றி முழு உலகினதும் தனித்துவமான கவனம் ஈர்க்கப்பட்டிருந்தது. குறிப்பாக ராஜபக்ஷ ஆட்சிக்காலங்களில் இந்நாட்டில் முதலீடுசெய்த கருத்திட்டங்கள் சம்பந்தமாக சர்ச்சைக்குரிய விடயங்கள் அம்பலமாகியிருந்த பின்னணியிலேயே இந்த விஜயம் இடம்பெற்றது. மேற்படி பல கருத்திட்டங்கள் “வெள்ளை யானையாகவே” மாறியிருந்தன. ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் “சினொபெக் கம்பெனி” இந்நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்காக கொண்டுவரப்பட்டது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வசமிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பல் நிலையங்கள் மேற்படி கம்பெனிக்கு விற்கப்பட்டது. இவ்விதமாக விற்பனை செய்கின்ற செயற்பாங்கில் தொடர்புபட்ட கம்பெனியொன்றை 3,700 மில்லியன் டொலர் நேரடியான வெளிநாட்டு முதலீட்டினைக் கொண்டுவருகின்ற கம்பெனியாக மாற்றிக்கொள்வது வியத்தகு இராஜதந்திர செயற்பாங்காகும். மதிப்புமிக்க இராஜதந்திரநிலையை இலங்கைக்கு மீண்டும் கையகப்படுத்திக்கொண்டமை பற்றிய தக்க சான்றாகும். அம்பாந்தோட்டை துறைமுகம் சார்ந்ததாக எரிபொருள் தூய்மையகமொன்றை ஆரம்பிக்க இந்த முதலீடுகள் ஈடுபடுத்தப்படும். இந்நாட்டின் வரலாற்றில் கிடைத்த மிகப்பெரியு நேரடி வெளிநாட்டு முதலீடு இதுவாகும். நாளொன்றில் இரண்டு இலட்சம் பெரல் எண்ணெய்யை இதன் மூலமாக சுத்திகரிக்க இயலும்.
அதற்கு மேலதிகமாக 500 மில்லியன் யுவான் அல்லது 20,000 மில்லியன் ரூபா கொடையை வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது, பொதுச் சேவைகளின் அபிவிருத்தி மற்றும் கிராமிய வறுமைநிலையை ஒழித்துக்கட்டுவதற்காக இந்த பணம் ஈடுபடுத்தப்படும். கொழும்பு துறைமுக நகரத்தில் சர்வதேச பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபமொன்றை அமைக்கவும் உதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்தின் விளைவாற்றலை அதிகரிக்கவும் உதவிவழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவுகின்ற பிராந்திய அதிகாரப் போட்டியில் இலங்கை ஒருகாலகட்டத்தில் அகப்பட்டிருந்ததென்பதை ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டும். உலக வல்லரசுகளின் எதிரில் மண்டியிட்டு அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்வதன் பாதகவிளைவுகள் அவ்வாறான மோசமான நிலையிலேயே இருந்தன. அந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து உலகின் மதிப்புமிக்க நாடாக இலங்கையை உயர்த்திவைக்கின்ற அத்தியாயமே தற்போது உருவாகியிருக்கிறது. இந்தியாவிற்கு எதிராக சீனாவை ஈடுபடுத்துதல் அல்லது சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஈடுபடுத்துதை முடிவுறுத்துவதே மேற்படி அத்தியாயத்தின் அத்திவாரமாக அமைகின்றது. திறந்த வெளியுறவுக்கொள்கையை கடைப்பிடிப்பதை ஆரம்பிப்பதாகும். ஒரு தேசம் என்றவகையில் மண்டியிட்டு இருக்கின்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். “கீழைத் தேசத்தின் முத்து” எனும் பெயரை உலகின் முன்னிலையில் கீர்த்திமிக்கவகையில் உயர்த்திவைக்கின்ற யுகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை முதன்மையாகக்கொண்ட அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றினை புதிதாக எழுதுகின்ற யுகத்தின் ஆரம்பமாகும்.
பிரியதர்ஷன தயாரத்ன தமிழில் – கிறிஸ்டோபர் மகேந்திரன்