ஜக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைக்கும் முயற்சியில் இரு கட்சிகளையும் சார்ந்த பல தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பேசி வருகின்றனர். இரு தரப்பினரும் இது குறித்து மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டுவருகின்றனர்.
ஏப்ரல் மாதத்திற்கு முன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன் பேச்சுவார்த்தைகளை முடித்துக்கொண்டு செயலில் ஈடுபட இருதரப்பையும் சார்ந்த அரசியல் தலைவர்கள் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர். இது குறித்து ஐ.தே.க வின் சிரேஷ்ட அரசியல்வாதிகளுக்கிடையில் கலந்துரையாடலொன்று கடந்த வாரம் இடம் பெற்றுள்ளது. அதில் அவர்கள் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். யாருடன் கூட்டு சேர்ந்தாலும் எந்த தேர்தலில் போட்டியிட்டாலும் யானைச் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்பதுதான் அது. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலின் போது கேஸ் சிலிண்டரில் போட்டியிட்டதால் தேசிய பட்டியலின் மூலம் கிடைத்த இரு பாராளு மன்ற உறுப்பினர் பதவிகளும் ஐ.தே.கவுக்கு கிடைக்காமல் போனது. அதனால் எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதை தவிர்க்கவே யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்று ஐ.தே.க தவிசாளர் வஜிர அபேவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு நளினின் பதில்
‘திசைகாட்டியின் அமைச்சர்கள் தற்போது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்து வருகின்றனர்”. இது ஊடகவியலாளர்கள் எழுப்பும் குற்றச்சாட்டு. ‘ கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்களால் பதில் அளிக்க முடியாது. இவர்கள் எப்படி பதிலளிப்பார்கள்? ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குருணாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது மேற்கண்டவாறு கூறினார்.
‘இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். நாங்கள் வொய்ஸ்கட் அரசியல் செய்வதில்லை. எங்களில் யாருக்கும் தனிப்பட்ட எஜன்டாக்கள் இல்லை. எங்களுக்கு இருப்பது ஒரு கொள்கை, ஒரு எஜன்டா, நாங்கள் நாட்டு மக்களுக்கு கூறுவதை ஊடகங்களிலும் கூறிவருகிறோம்.” அமைச்சர் பேராசியர் அனில் ஜயந்த இவ்வாறு கூறியது நண்பர்களுடனான நட்பு ரீதியான கலந்துரையாடலின் போதே. அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் இது போன்ற கருத்தையே கூறி இருந்தார். ‘நாங்கள் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் போவதில்லை. எமது அமைச்சர்கள், பிரதியமைச்சர்களுக்கு வேலைப்பளு அதிகம். அவர்கள் ஆற்றுவதற்கு நிறைய வேலைகள் உண்டு. அவற்றை அவர்கள் திறம்பட செய்து வருகின்றனர்” என்று அமைச்சர் நளிந்த கூறினார்.
விமான நிலையத்தில் சிறிதரனுக்கு நெருக்கடி; பின்னணியில் இருந்தது யார்?
தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சென்னை செல்வதற்காக கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றிருந்தார். தமிழ் நாட்டில் நடக்கும் ‘அயலக தின விழாவில்” தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்பின் பேரில் அவர் சென்னைக்கு பயணம் செய்வதற்கு கட்டுநாயக்கா விமான நிலையம் சென்றிருந்தார்.
விமான நிலையத்தில் சிறிதரனின் கடவுச் சீட்டை பரிசோதித்த குடி வரவு குடியகல்வு, திணைக்கள அதிகாரிகள் சிறிதரனிடம் பல கேள்விகளை கேட்டு நீங்கள் சென்னை செல்ல முடியாதென கூறினர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறிதரன், அதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். அவரது கடவுச்சீட்டைப் பயன்டுத்தி சென்னை போகமுடியாதென குடி வரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கூறினர். ‘நான் இந்த கடவுச் சீட்டின் மூலம் 04 முறை வெளிநாடு சென்று வந்துள்ளேன். அப்போது எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. என்னை பயணம் செய்யவிடாமல் தடுத்து நிறுத்த என்ன காரணம்” எனக் கேட்டார். இதற்கு உரிய பதில் அளிக்காமல் சாக்குப் போக்கு கூறினர். குடிவரவு குடியகல்வு, திணைக்கள அதிகாரிகள்.
இச்சம்பவத்தின் பின்னனியில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே இருந்துள்ளார் என்பது பின்னர் அறியக் கிடைத்தது. சிறிதரனின் வளர்ச்சியை பிடிக்காத அந்த அரசியல்வாதியின் செயற்பாடுகளை கட்சியினர் மற்றும் பொது மக்கள் கண்டித்து வருகின்றனர். குறிப்பிட்ட அந்த அரசியல்வாதியும் சென்னையில் அயலக தின விழாவில் கலந்து கொண்டிருந்தமை தெரிய வந்தது.
முறையற்ற விதத்தில் அரச வாகனங்களை கையாண்டமை
முன்னைய ஆட்சிகளின்போது தத்தமக்கு அதிகாரமுள்ள பதவிகளுக்கு தங்களின் சொந்த பந்தங்களையே நியமித்து கொண்டார்கள். அவர்கள் முறையற்ற விதத்தில் கப்பம், இலஞ்சம் பெற முன் வந்தனர். ஆதலால் அரசியலில் ஊழல், இலஞ்சம் பெற்றுக் கொள்வது ஒரு கலாசாரமாகப் பரவியது. இதற்கு புறம்பாக நாட்டில் போதை பொருள் வணிகம் செய்வோர், மக்களை கொன்று பணம் சம்பாதிப்போர் எனும் வர்க்கமும் உருவாகியது. இதனால் இந்நாட்டில் சிறந்த வணிக யுகமொன்றை உருவாக்கும் திட்டத்திற்கு தடை ஏற்பட்டது. இது பின்னால் பாரிய சவாலாக உருவெடுத்தது. பண வசதிப்படைத்த சில வணிகர்களால் கப்பம்பெற்ற ஊழல் செய்த அரசியல்வாதிகளால் நிலையான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை செய்யும் தொழில் முயற்சியாளர்களுக்கு தடை ஏற்பட்டது. இவ்வாறு இலஞ்சம் கொடுப்பவர்களுக்கே அரசின் கொந்தராத்துக்கள், ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அரசின் நிதி தவறாக கையாளப்பட்டமை நன்கு புலப்படுகிறது.
இந்நிலைமைகள் நீதி மன்றில் நிரூபிக்கப்பட்டோ அல்லது நிரூபிக்கப்பப்படாமல் இருப்பினும் அதுதான் உண்மை. கல்வித் துறையிலும் பாரிய ஊழல் மோசடிகள் காணப்படுகின்றன. பாடசாலைக்கு மாணவர்களை சேர்க்கும் போதும் இலட்சங்கள் இலஞ்சமாகப் பெறப்படுகிறது. பரீட்சைகளிலும் மோசடிகள் நடைபெறுகின்றன. இது காலந்தோறும் நடைபெற்று வருகின்றது. கடந்த 5ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். வினாப்பத்திரம் பணத்திற்கு விற்கப்படுகின்றது. இந்நிலைமைகள் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சில காலத்திற்கு முன்பிருந்தே இவ்வாறு நடைபெறுகின்றது. முழு நாட்டிலும் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் நடந்தால் இதுவரை தற்காலிக தீர்வுகளே வழங்கப்படுகின்றன. ஆனால் நிரந்தர தீர்வுகளே பெற்றுத்தர வேண்டியது கட்டாயம். தவறான அவசர தீர்வுகளால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மாறாக அவசர தீர்வுகளால் வேறு பிரச்சினைகள் எழுகின்றன. நாட்டின் கல்வித் துறையிலோ சுகாதார துறையிலோ கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நாட்டின் ஸ்திரத் தன்மைக்கு பாதகமாக அமைந்தன. கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் தேசிய துறைகளாக கருதப்படுகின்றன.
காணிகளை வாங்கிய அமைச்சர் யார்?
கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது 2009 ஆம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ‘தேசத்தின் மகுடம் கண்காட்சி நிகழ்வுகளின் கோப்புகள் வெளியில் கசிந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அந்நிகழ்வின் போது சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் அப்போதிருந்த பிரபல அமைச்சர் ஒருவர் 150 எக்கர் காணியை வாங்கியுள்ளார். அதுவும் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பெயரில். அக்காலத்தில் கோட்டா உயர் அதிகாரியாக இருந்தும் இவ்வாறு காணியை வாங்கிய அமைச்சர் கோட்டாவுக்கும் தெரியாமல் காணியை வாங்கியுள்ளமை தற்போது தெரிய வருகிறது. ‘தேசத்தின் மகுடம்’ என்னும் நிகழ்வு அக்காலத்தில் ஓர் குடும்பத்துக்கான வருமானம் ஈட்டும் நிகழ்வு என்று கூறப்பட்டு வந்தது. அக்குடும்பம் யாருடையது என்று நாம் சொல்லத் தேவையில்லை. நாட்டு மக்கள் அறிந்ததே.
அம்பாறையில் நடந்த ‘தேசத்தின் மகுடம்’ நிகழ்வில் அரந்தலாவ துயர சம்பவத்தை முன்னிலைப்படுத்தி ‘தேசத்தின் மகுடம்’ கண்காட்சியில் புகைப்படங்கள் சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதை முன்னின்று நடத்தியது மேற்கூறிய அமைச்சரே. 15 இலட்சம் பேர் கண்காட்சியை காண வருகை தந்திருந்ததாக தகவல் வழங்கியிருந்தார் அவ்வமைச்சர். வந்தது இரண்டரை இலட்சம் பேர் மாத்திரமே. அந்நிகழ்வின் நிறைவில் சுமார் 120 இலட்சம் ரூபா பணம் அமைச்சரின் பொக்கட்டுக்குள் சென்றதாக விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர். கோட்டாவின் ஏற்பாட்டில் அவரின் தலைமைத்துவத்தின் கீழ் நடந்த அந்நிகழ்வில் இவ்வாறு பாரிய தொகையொன்றை அமைச்சர் சம்பாதித்தது கில்லாடி வேலைதான். கோட்டாவிற்கே தெரியாமல் கனகச்சிதமாக கோடிகளில் சம்பாதித்த அமைச்சரும் கில்லாடிதான்.
தற்போது அநுரவின் அரசாங்கம் அந்த மோசடி தொடர்பான கோப்புகளை திறந்து மோசடியாளர்கள் மீது வழக்கு தொடர வேண்டுமென்பதே மக்களின் கருத்தாகும். கள்ளர்களை பிடிப்போம்… பிடிப்போம்… என்று கூறிக்கொண்டிருக்காமல் அதனை செய்து காட்டுவதே தற்போதைய ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்க வேண்டும்.
கிளின் ஸ்ரீலங்கா
ஜனாதிபதி கிளின் ஸ்ரீலங்காவை முன்னுரிமைப்படுத்திச் செயற்பட்டாலும் சில அமைச்சர்கள் அது விடயத்தில் இன்னமும்’ சிறப்பாக செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி எண்ணுகின்றார். அவ்வாறு சிலர் சிறப்பாகச் செயற்படாதது ஜனாதிபதிக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் தங்களது செயற்பாடுகளை துரிதப்படுத்தி நாட்டு மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ள போதிலும் சில அமைச்சர்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என திசைகாட்டியின் பெலவத்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி இரவு நித்திரைக்கு செல்லும் போதும் காலையில் நித்திரை விட்டு எழுந்திருக்கும் போதும் எந்த அமைச்சர் என்ன செய்கிறார் என்று சிந்தித்து அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிச் சிந்தப்பதாக சீன விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி மேற்கூறிய விடயம் தொடர்பாக அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் திசைகாட்டி தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாமலின் பஸ் பாசம்
‘கிளின் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மூலம் பஸ், மோட்டர் சைக்கிள், ஆட்டோ போன்றவற்றில் பொருத்தப்பட்டிருந்த விதிகளுக்கு புறம்பான உதிரிப்பாகங்களை பொலிசார் அப்புறப்படுத்தி வந்தது யாவரும் அறிந்ததே. பொலிசாரின் இச்செயற்பாட்டினை நாமல் எதிர்த்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பினார். இந்த நடவடிக்கை போக்குவரத்து சேவையை அழித்துவிடும் எனவும் தவறான நடவடிக்கை எனவும் கூறினார் நாமல். நாமல் அதனை எவ்வாறு சொல்லமுடியும்?. நாமலின் தந்தை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொது மக்களுக்கு பாரிய சிரமங்களை ஏற்படுத்தும் விடயங்களை முன்னின்று செய்தவர்கள் ராஜபக் ஷவின் செல்லப்பிள்ளைகள்.
நாமல் போன்றவர்கள் பொது போக்குவரத்தை எக்காலத்திலும் பயன்படுத்தியது இல்லை. மாறாக சொகுசு வாகானங்களிலேயே பயணம் செய்தனர். இப்போது மட்டும் எங்கிருந்து அவருக்கு வந்தது இந்த அக்கறை என்று வினவுகின்றனர் பொது மக்கள். பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் சாதாரண பிரஜைகள் பாதுகாப்பு கருதியே பஸ்களில் பொருத்தப்ட்டுள்ள தேவையில்லாத அலங்காரங்களை பொலிசார் அகற்றி வருகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லை.
தந்தை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாமல் பௌத்த மக்களின் புனித தலமான தலதா மாளிகையை சுற்றி கார்ப் பந்தயம் நடத்தினர். பௌத்த மதத் தலைவர்களின் எதிர்ப்புகளை மீறி கார்ப் பந்தயம் நடத்தப்பட்டது.
அப்போதைய ஜனாதிபதியாக நாமலின் தந்தையின் ஆசீர்வாதத்துடன் கார்ப் பந்தயம் நடத்தப்பட்டது. இதைப்பற்றி அப்போது எல்லோரும் வாய் முடி மௌனிகளாக இருந்தார்கள். இப்போது கூக்குரல் எழுப்பும் பஸ் கெமுனுவும் மௌனியாகவே இருந்தார். இப்பொழுது அநுரவின் திட்டங்கள் குறித்து பேச நாமலுக்கோ பஸ் கெமுனுவுக்கோ அருகதை இல்லை. மக்களும் அவர்களை கண்டு கொள்ளவில்லை.