எப்போதும் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு பிரபலமான இடமாக திகழும் Pegasus Reef ஹோட்டல், 2024 ஆம் ஆண்டை நிறைவு செய்து, 2024 டிசம்பர் 31ஆம் திகதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் Crimson Eve கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றது. இங்கு ஹோட்டலின் துடிப்பான வெப்பமண்டல கருப்பொருளின் கீழ் ஆடம்பரமான நிகழ்வுகள் இடம்பெற்றன. இது பண்டிகைக் கொண்டாட்ட நிகழ்வுகளில் பங்கேற்பாளர்களை கவர்ந்தது. ஒவ்வொரு நிகழ்வும் பண்டிகையை அரவணைப்புடன் கொண்டாடியதோடு, ஹோட்டலுக்கு உரித்தான புகழ்பெற்ற விருந்தோம்பல் மற்றும் உயர்ந்த சேவையை அனுபவிக்கும் வாய்ப்புடன் மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கி விருந்தினர்களை மகிழ்வித்தது.Crimson Eve கொண்டாட்டமானது, சந்தேகத்திற்கு இடமின்றி பண்டிகையின் சிறப்பம்சமாக இருந்தது. இங்கு Freeze மற்றும் DJ Beats ஆகியோரின் அற்புதமான நேரடி கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அவர்கள் மாலை முழுவதும் சூழலையையும் நடனத் தளத்தையும் உயிரோட்டமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருந்தனர். விருந்தினர்கள் சுவையான buffet (புஃபே) இரவு உணவை அனுபவித்தனர். இதில் அனைத்து சுவைகளுக்கும் ஏற்றவாறு பல பாரம்பரிய உணவுகள் மற்றும் புத்தாக்கமான படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இவை யாவும் ஹோட்டலின் தனித்துவமான BYOB கொள்கையை பூர்த்தி செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டன. இது விருந்தினர்களுக்கு அவர்களின் சொந்த தெரிவில் மாலை நேரத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. குறிப்பாக பருவ கால கொண்டாட்டத்திற்காக அமைக்கக்கப்பட்ட வெப்பமண்டல கருப்பொருள் (tropical theme) ஆனது, கொண்டாட்டங்களுக்கு ஒரு கவர்ச்சியான மெருகூட்டலைச் சேர்த்தது.
இப்பருவகால கொண்டாட்டத்தை இத்தனை சிறப்பாக நிறைவு செய்ய முடிந்தமை தொடர்பில், Pegasus Reef ஹோட்டலின் பொது முகாமையாளர் ரேணுக் கொஸ்வத்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.