அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட்டாக வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது ‘விடாமுயற்சி’ படத்தின் ட்ரெய்லர். காதலும் காதல் நிமித்தமுமான வசனங்கள், காட்சிகளுடன் தொடங்கும் ‘விடாமுயற்சி’ ட்ரெய்லர் பின்னர் அக்ஷன் மோடுக்கு நிதானமாக மாறுகிறது. க்ரைம் – த்ரில்லராக இருந்தாலும் நிதானமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது ‘இன்டென்ஸ்’ தன்மையை கூட்டும் என்பதை உணர முடிகிறது.
படத்தில் அஜித்தின் வசனங்களும், அவரது பாடி லேங்குவஜும் ஒட்டுமொத்தமாக படம் முழுவதும் ஸ்டைலிஷ் ஆக வலம் வருவதை உறுதி செய்கிறது. அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினாவின் இருப்பும் கூட இந்த ட்ரெய்லரில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ெபப்ரவரி 6-ல் ரிலீஸ்: லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெப்ரவரி 6-ம் திகதி வெளியிடுகிறது.
பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட ‘விடாமுயற்சி’ திரைப்படம் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. இப்படம் பிரேக்டவுன்’ படத்தின் ரீமேக். காப்புரிமை தொடர்பாக ஹாலிவுட் நிறுவனத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் வரவேண்டிய இ-மெயிலும் லைகா நிறுவனத்துக்கு வந்துவிட்டதாம். இப்படம் ஹாலிவுட் படமான ‘ப்ரேக் டவுன்’ படத்தின் தழுவல் என்பது நினைவுக் கூரத்தக்கது. ‘