பணி செய்வதற்கான மிகச்சிறந்த இடம் (கிரேட் பிளேஸ் டு வேர்க்) மூலம் AIA இலங்கையின் சிறந்த பணியிடங்களில் ஒன்றாகக் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ச்சியாக 12 ஆண்டுகளாக இந்த அங்கீகாரத்தினைப் பெற்ற ஒரேயொரு ஆயுள் காப்புறுதி நிறுவனமாகவும் திகழ்கின்றது. இந்த வரலாற்று மைல்கல்லின் சாதனையானது தொடர்ந்து ஏழாவது ஆண்டாகவும் பெண்களுக்கான சிறந்த பணியிட விருது, இளம் திறமையாளர்களுக்கான சிறந்த பணியிடங்கள் மற்றும் மதிப்புமிக்க நல்வாழ்வு வெற்றியாளர் விருது உள்ளிட்ட பல கௌரவமிக்க விருதுகளுடன் ஒருமித்தே பயணிக்கின்றது. AIA ஆனது LMD மற்றும் பெபர்கியுப் கென்சல்டன்ஸ் நிறுவனங்களினால் ஆயுள் காப்புறுதித் துறையில் மகிழ்ச்சியான பணியிடமாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இப்பாராட்டுக்கள் நிறுவனம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்கி அதன் ஊழியர்களை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் கொண்டாடும் பணியிடக் கலாசாரத்தினை வளர்ப்பதில் AIA இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பினை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. நிறுவனத்திற்குள் ஊழியர்களினாலும் நிறுவனத்திற்கு வெளியே தொழிற்துறை நண்பர்களினாலும் மதிக்கப்படும் புதுமை, அனைவரையும் உள்வாங்கல், மற்றும் ஒத்துழைப்பு போன்றன செழித்தோங்கும் பெருநிறுவனக் கலாசாரத்தின் கலங்கரை விளக்கமாகவே AIA திகழ்கின்றது.
AIA இன் சொந்த ஊழியர்களினால் வழங்கப்படும் நேரடியான பின்னூட்டங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் பணி செய்வதற்கான சிறந்த இடம் அங்கீகாரமானது ஊழியர்கள் பெறுமதியுடையவர்களாக, ஆதரவுமிக்கவர்களாக மற்றும் ஊக்கமளிக்கப்பட்டவர்களாக உணரும் பணியிடத்தினை மேம்படுத்துவதற்கான நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதற்கிடையில் LMD மற்றும் பெபர்கியுப் கென்சல்டன்ஸ் நிறுவனங்களின் ஆய்வுகள் மூலம் தொழில்துறை வல்லுநர்களினால் வழங்கப்படும் மகிழ்ச்சியான பணியிட விருதானது AIA இன் கலாசாரத்தின் பரந்துபட்ட நேர்மறையான செல்வாக்கினை மேலும் எடுத்துக்காட்டுவதுடன் இது நிறுவனத்திற்கு வெளியேயும் தனது அர்ப்பணிப்பினைப் பறைசாற்றுகின்றது.
இந்த வெளிப்புற அங்கீகாரமானது AIA தனது ஊழியர்களுக்காக உருவாக்கியுள்ள மேம்படுத்தும் மற்றும் ஊக்கமளிக்கும் பணிச் சூழலுக்குச் சான்றாகச் செயல்படுகின்றது.