பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் தான் தர்ஷிகா. இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார். இந்த சீசனின் ஆரம்பத்தில் கடுமையான போட்டியாளராக காணப்பட்ட தர்ஷிகா, நாளடைவில் தான் வந்ததற்கான நோக்கத்தை மறந்து பின்வாங்கினார். அதற்கு காரணம் விஷால் மீது அவர் கொண்ட காதல்தான். இதனால் நெருங்கிய நண்பர்கள் ஆன பவித்ராவுக்கும் தர்ஷிக்காவுக்கும் இடையில் வாக்குவாதம் கூட நடைபெற்றது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன தர்ஷிகா வழங்கிய பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதன்படி அவரிடம் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வெளியே வந்த பிறகு உங்களுக்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த தர்ஷிகா, தான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு நிறைய பேர் சப்போர்ட் பண்ணி இருந்தார்கள்.. வெளியில் நிறைய நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. எனக்கு வெளியில் இப்படியெல்லாம் ரெஸ்பான்ஸ் இருக்குது என்று தெரிந்திருந்தால் பிக்பாஸில் இன்னும் நன்றாக விளையாடி இருப்பேன்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே எனக்கு நிறைய யோசனை இருந்தது.. அதாவது எனக்கென பேன்ஸ் பேஜ் இருக்குமா? ரசிகர்கள் இருப்பார்களா என்று.. ஆனால் நான் வெளியே வந்த பிறகு ஆரம்பத்தில் நன்றாக விளையாடிய உங்களுக்கு இடையில் என்ன நடந்தது என்ற கேள்வி பல எழுந்தது. நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் முதலில் செய்த விஷயம் நன்றாக சாப்பிட்டது தான். மேலும் ஜாக்குலின் சிறந்த போட்டியாளராக காணப்படுகின்றார். முத்துக்குமரனையும் பிபி வீட்டுக்கு என்றே களமிறக்கி இருக்கிறார்கள்.
மஞ்சரியும் சிறந்த போட்டியாளராக காணப்படுகின்றார் என்று தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் தர்ஷிகா. தற்போது அவர் தெரிவித்த பேட்டி வைரல் ஆகி வருகின்றது.