விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ட்ரெயின் படம் தயாராகி வருகின்றது. இந்த படத்தினை மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதோடு இந்த படத்தை தொடர்ந்து 96 படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி இயக்குநர் ஹரியுடன் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி தமிழ் சினிமாவில் சாமி, வேல், ஆறு என பல பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த ஹரி உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார் விஜய் சேதுபதி.
ஹரி இயக்கத்தில் விஷால் இறுதியாக நடித்த ரத்னம் படம் தோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் கம்பேக் கொடுக்கும் வகையில் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடி இணைந்தால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் நான்காவது படமாக இது காணப்படும். ஏற்கனவே விஜய் சேதுபதியும் நயன்தாராவும் நானும் ரவுடிதான், இமைக்கா நொடிகள், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.