உலக வரைப்படத்தை உற்று நோக்கினால், பளிச்சென தெரிவது பசுபிக் பெருங்கடல். புவி நிலப்பரப்பை விட மிகப் பெரியது. இதற்கு, பசுபிக் என்று பெயரிட்டவர் போர்த்துகீசிய மாலுமி ஃபெர்டினாண்ட். இதன் பொருள் அமைதிக்கடல் என்பதாகும். ஆனால், சுனாமி அதிகம் உருவாவது இந்த கடலில் தான். பசுபிக் கடல் நீளம், 16 ஆயிரம் கி.மீ., அகலம் 11 ஆயிரத்து 200 கி.மீ., ஆழம், 1765 மீற்றர். இதன் அடிப் பகுதியில், 3,200 கி.மீ., நீளத்திற்கு ஒரு மலைத் தொடர் இருக்கிறது.
வட அமெரிக்க கண்ட பகுதியில் உள்ள ஹவாய் தீவுகள் இந்தத் தொடரின் பாதையில் உள்ளன. இது பற்றி, 16ஆம் நூற்றாண்டில் தான் உலகம் முழுவதும் தெரிய வந்துள்ளது.