சலசி லங்கா இன்ஜினியரிங் சர்வீஸ் (பிரைவேட்) கம்பெனி தமது www.sles.lk என்ற இணைய தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
சலசி லங்கா (பிரைவேட்) கம்பெனி நாட்டின் கட்டட நிர்மாண துறையில் ஈடுபட்டுள்ள பிரதான தனியார் கம்பெனி ஒன்றாகும். 2000ஆம் ஆண்டிலிருந்து எமது நாட்டில் கட்டட நிர்மாணத் துறையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் Construction Excellence விருதையும் வென்றது.
கட்டட நிர்மாண வேலைகளுக்கான பொறியியல் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2009ஆம் ஆண்டில் சலசி இன்ஜினியரிங் சர்வீசஸ் பிரைவேட் கம்பெனி நிறுவப்பட்டது. இந்தக் கம்பனி நமது நாட்டில் பல பாரிய செயற்றிட்டங்களில் தமது பங்களிப்பை வழங்கி இருப்பது விசேஷமாக கருதப்படக் கூடியது. இந்த சலசி லங்கா இன்ஜினியரிங் பங்களிப்பை வழங்கி இருப்பது விசேஷமாகக் கருதலாம்.
இந்த சலசி லங்கா இன்ஜினியரிங் சர்வீஸ் பிரைவேட் கம்பெனி வழங்கும் கட்டட நிர்மாணத்துறை தொடர்பான சேவைகள் சம்பந்தமான எமது நாட்டு மக்களுக்கு நன்கு அறிய தருவதற்காக கம்பனியின் www.sles.lkஇணையத் தளம் கொழும்பு இல. 44 மருதானை டெம்பிள் வீதியில் உள்ள சலசி லங்கா கம்பனியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த விசேட நிகழ்ச்சியின்போது உரையாற்றிய சலசி லங்கா பிரைவேட் கம்பெனி மற்றும் சலசி லங்கா இன்ஜினியரிங் சர்வீஸ் பிரைவேட் கம்பனியின் தலைவர் யு.ஏ பாதுக்க கருத்துக் கூறியதாவது –
தமது கம்பனியுடன் செயலாற்றும் நுகர்வோர் மற்றும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தமது கம்பெனிகள் தொடர்பான உண்மையான மற்றும் புதிய நிர்மாணப் பணிகளின் தன்மையை அறிந்து கொள்ள அவகாசம் வழங்குவது www.sles.lk இணைய தளத்தை ஆரம்பிப்பதற்கான நோக்கமாகும்.
இக் கம்பனியின் நிர்மாணப்பணிகள் கட்டடங்களில் நீர்க் கசிவு, மற்றும் பழைய கட்டடங்களில் நீர்க் கசிவு மற்றும் மேல் மாடிகளில் அழகான நீர்த் தடாகங்கள் போன்றனவற்றின் வடிவமைப்பு க்கு தேவையான மூலப்பொருட்களை வழங்க சிங்கப்பூர் கம்பெனியான Ardex Quickseal Singapore Company வியாபார மேம்பாட்டு முகாமையாளர் திருமதி தெரசா லிம் உடன் இணைந்து இலங்கையில் இத்துறையில் செயற்பட்டு வருகின்றது.
கட்டங்கள் கசிவு, வெடிப்பு அடித்தள நீர்த்தாங்கி ஒட்டுதல் போன்றவற்றிற்கான சகல விதமான ஒட்டு சீமெந்துக்கள், மூலப்பொருட்களும் நாட்டின் பல பாகங்களிலும் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அஷ்ரப் ஏ சமத்)