நவீனக் கட்டடக் கலையின் மாபெரும் சாதனையாகவும் இருபதாம் நூற்றாண்டின் தனித்துவமான கட்டடங்களில் ஒன்றாக அவுஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸ் புகழப்படுகிறது. இது 1973 ஆம் அண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் அரசின் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் மற்றும் அதன் வடிவமைப்பு உலகளாவிய அளவில் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை டென்மார்க்கைச் சேர்ந்த பிரபல கட்டடக் கலைஞர் ஜோன் அட்சன் வடிவமைத்தார்.
இவர் கோபன் ஹேகன் நகரில் 1918-இல் பிறந்தார். இவரது தந்தை கடல்சார் கட்டடக் கலைஞர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜோன், ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவுக்கும் சென்றார். 1950-இல் தனது சொந்த ஊரான கோபன் ஹேகனுக்கு திரும்பி சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின்னர், கட்டட வடிவமைப்பில் அனுபவம் பெறுவதற்காக அவர் சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
மேலும், மெக்ஸிகோவின் மாயன் இனத்தவரின் கட்டடக் கலையால் அவர் பெரிதும் கவரப்பட்டார்.
1950இல் தனது சொந்த ஊரான கோபன் ஹேகனுக்கு திரும்பி, சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். 1957ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸை வடிவமைக்க நடந்த போட்டியில் அவர் வெற்றி பெற்றார்.
2007-இல் இந்தக் கட்டடத்தை யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரித்தது.