21
பன்னூலாசிரியரும் சன்மார்க்க அறிஞருமான அல்ஹாஜ் மௌலவி காத்தான்குடி பௌஸ் நேற்று முன்தினம் (06) மாலை தனது 65 ஆவது வயதில் காலமானார். அன்னாரின் ஜனாஸா காத்தான்குடி ஜாமிஉல் லாபிரீன் ஜும்மா பள்ளி மையவாடியில் நேற்று (07 ) சனிக்கிழமை காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தின்போது, பெருந்திரளான ஊர்மக்கள் மற்றும் அவர் பணிபுரிந்த பாணந்துறை பகுதியிலிருந்தும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அல்ஹாஜ் மௌலவி பௌஸின் இழப்பு, ஈடுசெய்ய முடியாததென,ஊர்மனை மஸ்ஜிதுல் முபாரக் ஜும்மா பள்ளியின் பிரதம இமாம் மௌலவி யு.எல்.எம்.பைசர் ஹசனி தெரிவித்தார்.
மொறட்டுவை மத்திய விசேட நிருபர்