2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் SLT- MOBITEL குழுமம் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 1,093 மில்லியனை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் ரூ. 1,543 மில்லியன் நட்டத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனூடாக நிறுவனத்தின் இலாபம் 171% எனும் பெரும் இலாப அதிகரிப்பை பதிவு அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தைப் பொறுத்தமட்டில், ஸ்ரீ லங்கா ரெலிகொம், 2024 மூன்றாம் காலாண்டில் ரூ. 932 மில்லியனை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ரூ. 651 மில்லியன் நட்டத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனூடாக, நட்டத்திலிருந்து இலாபத்துக்கு வெற்றிகரமான மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காலாண்டில் குழுமம் ரூ. 28.5 பில்லியனை திரண்ட வருமானமாக பதிவு செய்துள்ளதாகவும், முன்னைய ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவாகிய ரூ. 27.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 3% அதிகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகர இலாபம் ரூ. 12.3 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், முன்னைய ஆண்டின் ரூ. 9.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 24.8% அதிகரிப்பாகும். குழுமத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட செலவு சேமிப்பு செயற்பாடுகளினூடாக இந்த அதிகரிப்பு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குழுமத்தின் EBITDA ஆனது, 2024 மூன்றாம் காலாண்டில் ரூ. 10.5 பில்லியன் எனும் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டில் பதிவாகிய ரூ. 8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 30.6% வளர்ச்சியாகும். மேலும், தொழிற்படு இலாபம் ரூ. 3.6 பில்லியனை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் ரூ. 549 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 551% மாபெரும் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறத்தில் குழுமம் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பல்வேறு செலவு பிரிவுகளில் பெருமளவு சேமிப்புகளை அடைந்துள்ளது. அவற்றில் வருடாந்த பராமரிப்பு செலவுகள் (AMC) மற்றும் பழுதுபார்ப்பு செலவுகள் பிரிவில் பெருமளவு சேமிப்பு பதிவாகியிருந்தது. வருடாந்த ஒப்பீட்டு செலவுக் குறைப்பில் இது குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தது. காலாண்டுக்கான செலவுகள் (மதிப்பிறக்கம் மற்றும் தேய்மானம் தவிர்ந்தவை) ரூ. 18 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் ரூ. 19.7 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 8.3% வீழ்ச்சியாகும். மேலும், நிதிசார் செலவுகள் 18.1% இனால் குறைவடைந்து, நேர்த்தியான நிதிசார் செயற்திறனுக்கு வலுவூட்டியுள்ளது.நிறுவனமட்டத்தில் வருடத்தின் 3ஆம் காலாண்டிலில் SLT ரூ. 18 பில்லியன் வருமானத்தை பதிவு செய்திருந்தது. கடந்த ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 17.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 603 மில்லியன் உயர்வு என்பதுடன் 3.4% வளர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தது. நிகர இலாபமும் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 22.8% எனும் வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 1.6 பில்லியனை எய்தியிருந்தது. மேலும், நிறுவனம் தனது தொழிற்படு செலவுகளை வெற்றிகரமாக கையாண்டிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ. 638 மில்லியன் செலவு சேமிப்பை எய்தியிருந்தது. வருடாந்த பராமரிப்பு செலவுகள், பழுதுபார்ப்புகள் மற்றும் வாகன வாடகை செலவுகள் போன்றவற்றில் ஏற்பட்ட குறைவின் காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 5.4% வீழ்ச்சியை எய்தியிருந்தது.