இருண்ட போர் வாழ்வில்
பெருக்கெடுத்து ஓடும்
குருதி வெள்ளத்தில்
கரையொதுங்கிப் போய்
அகதியாய் தஞ்சமடைந்த
உயிர் ஓலங்களுக்கு
நிவாரணப் பொதியாய்
வந்தாய் வேதாந்தி
பசித்திருந்த மக்கள்
உன் வரவால் பசியாறிக் கொண்டார்கள்
தூங்கியிருந்த மக்கள்
உன் குரலால் கண்விழித்துக் கொண்டார்கள்.
உன் கவிதைகள்
போர் முனையில் துப்பாக்கி ஏந்திய படை வீரன் போன்று
அஞ்சிடாமல் களத்தில் நின்று எதிரிகளைப் போட்டுத்தள்ளி
யுத்த வெற்றி நாயகனாய் வலம் வந்தன
_—-
வேகமாய் செல்லும் உன் வாகனத்தில்
துப்பாக்கி ரவைகள்
நிஞ்சு நிமிர்த்தி சமூகத்தின் காவலனாய்
எப்பொழுதும் கண் விழித்திருக்கும்
பிறை எப் எம் வானொலி
உங்கள் வரலாற்றின் குரல்
நீங்கள் மரணித்தாலும்
உங்கள் குரலோசை
எப்பொழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்
பங்கரில் ஒளிந்து கொண்டு
தம் சமூக இருப்பின் உரிமைக்காய்;
வெற்றுக் குண்டுகளை வீசுபவர் அல்ல நீங்கள்
எத்தருணத்திலும் நீங்கள்
பொது வெளியில் நின்று நெருப்பாய் எரிந்து கொண்டுதான் இருப்பீர்கள்.
நீங்கள் மரணிக்க வில்லை.
உங்கள் கவிதைகள்
கண் மூடாமல் உயிரோடு விழித்து இருக்கின்றன.
நீங்கள் நட்ட விதைகள்
வேருடன்; விளைந்து நறுமணத்துடன் பூத்துக் குலுங்குகின்றன.
நீங்கள் இறையோனின் சுவர்க்கத்துப் பூஞ்சோலையை தரிசிக்க
எப்பொழும் நாங்கள் இரு கரங்கள் ஏந்தி நிற்போம்.