மட்டக்களப்பின் பிரபல இயக்குனர் தேவா- அலோசியஸ் இயக்கிய 25வது திரைப்படமான “சாவடி” விரைவில் திரையிடப்பட உள்ளது. தேவா சினி புரொடக்ஷன் வழங்கும் இந்தத் திரைப்படம், வெறும் 2 நாட்களில் படமாக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில், மட்டக்களப்பின் பல முக்கிய நடிகர்கள் சிறப்பாக பங்கேற்றுள்ளனர். மேடை நாடகம் என பல்வேறு நாடகங்களில் நடித்து வரும் நடிகர் புவிராஜ் பஸ் பிரயாணியாக இந்தப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த “சாவடி” திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அதன் வெளியீட்டிற்கு அதிகரித்த எதிரொலி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு பின்னணி இசையை சங்கர்ஜன் இசையமைத்துள்ளார். ஆடை வடிவமைப்பு மற்றும் ஒப்பனை பணிகளை டிவதர்ஷினி மெற்கொண்டுள்ளார்.
இசைக்கலவை மற்றும் டப்பிங் ஆகிய பணிகளை எமில் பிரியானந்த் மேற்கொண்டுள்ளதுடன் கலை இயக்கப் பணிகளை புவிராஜும் மேலதிக படக்கோர்ப்புகளை கிரேஷன் பிரசாந்த்தும் ஒளிப்பதிவு மற்றும் படக்கோப்புகளை நிருஷாந்மேற்கொண்டதுடன் நிறக் கலவை மற்றும் காட்சித்தாக்கம் ஆகிய பணிகளை சதீஷ் மேற்கொண்டுள்ளார். இந்தத் திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.