கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.
இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.
இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் டிசம்பர் 20 ஆம் திகதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கி நடந்துவந்த நிலையில் தற்போது முழுவதுமாக படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சனிக்கிழமை மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டுள்ளது.