Home » தனிப்பயனாக்கக்கூடிய ஆயுள் காப்புறுதித் தீர்வான சேவ்ஸ்மாட் இனை அறிமுகப்படுத்தும் AIA

தனிப்பயனாக்கக்கூடிய ஆயுள் காப்புறுதித் தீர்வான சேவ்ஸ்மாட் இனை அறிமுகப்படுத்தும் AIA

by Damith Pushpika
November 24, 2024 6:00 am 0 comment

இலங்கையர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்ட புத்திசாதுர்யமான மற்றும் மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய ஆயுள் காப்புறுதித் திட்டமான AIA சேவ்ஸ்மாட் இனை அறிமுகப்படுத்துவதில் AIA இன்சூரன்ஸ் மிகவும் பெருமிதம் கொள்கின்றது. AIA சேவ்ஸ்மாட் தனிப்பட்ட சேமிப்பு இலக்குகளுக்கு ஏற்ப பிள்ளையின் உயர் கல்வித் தேவைக்கான சேமிப்பாக அல்லது நீங்கள் விரும்பும் உங்கள் கனவு ஓய்வூதியத் திட்டத்திற்கான சேமிப்பாக அது எதுவாக இருந்தாலும் மிகவும் நெகிழ்வான மற்றும் அணுகக்கூடிய தீர்வினையே வழங்குகின்றது.

தனது நிதியியல் ரீதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதற்கு விரும்பும் எந்தவொரு நபருக்கும் மிகச் சிறந்த தேர்வாக AIA சேவ்ஸ்மாட் தன்னை தனித்து அடையாளப்படுத்துகின்றது. இக்காப்புறுதித் திட்டமானது வாடிக்கையாளரின் சேமிப்புத் தேவைகளின் குறிப்பான தன்மைக்கேற்ப தனித்துவமாக வடிவமைக்கப்பட்டு இணையற்றதொரு நெகிழ்வுத் தன்மையினை வழங்குகின்றது. பிள்ளையின் கல்விக்கு நிதியளிப்பது முதல் சுகாதாரத் தேவைக்கான நிதியினைக் கட்டியெழுப்புவது அல்லது ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் வரை AIA சேவ்ஸ்மாட் பல்வேறு தலைமுறையினரின் சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்து உங்களுடன் இணைந்து வளர்ச்சியடையும் ஒரு பரிபூரணமான காப்புறுதித் தீர்வினையே உங்களுக்காக உறுதி செய்கின்றது.

AIA சேவ்ஸ்மாட் அதன் முதலீட்டு அனுகூலங்களுக்கு மேலதிகமாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தேவைகளின் அடிப்படையில் தெரிவு செய்யக்கூடிய பரந்த அளவிலான விருப்பத் தேர்வுக்குரிய அனுகூலங்களையும் வழங்குகின்றது. இவ்வாறான மேலதிக அனுகூலங்கள் இக்காப்புறுதித் திட்டத்தின் ஒட்டுமொத்தப் பெறுமதியினை மேம்படுத்துவதுடன் தனிநபர் ஒருவரின் தனிப்பட்ட தேவைகள் அனைத்தும் மிகவும் உயர்வான பராமரிப்பு மற்றும் கவனத்துடன் பூர்த்தி செய்யப்படுவதை உறுதியும் செய்கின்றது.

AIA சேவ்ஸ்மாட் ஒரு சேமிப்புத் திட்டம் என்பதற்கு அப்பால் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு வடிவமைக்கப்பட்ட நல்வாழ்வுத் தீர்வுகளின் முழுமையான சூழல்தொகுதியுடன் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் நிதியியல் பாதுகாப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு AIA சேவ்ஸ்மாட் இலங்கையர்கள் ஆரோக்கியமான, நீண்ட ஆயுளுடன், மிகச்சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கும் மிகவும் வசதியளிக்கின்றது.

இந்தத் திட்டம் பல்வேறு நல்வாழ்வு, ஆரோக்கியம் மற்றும் நிதியியல் அனுகூலங்களை ஒருங்கிணைத்து தனது வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு உதவுவதில் AIA இன் உறுதிப்பாட்டை மிகவும் வலுப்படுத்துகின்றது. பிளேஸ் ஹெல்த், ஹை ஒக்டேன் பிட்னஸ்; ஜிம், சித்தாலேபே, மை டென்டிஸ்ட், விடா மெடிக்கல் கிளினிக், யுனிலிவர் பியுரிட், விஷன் கெயார் மற்றும் டொக்990 ஆகிய இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற சுகாதார மற்றும் ஆரோக்கியப் பங்காளர்களுடன் கூட்டாண்மையினை ஏற்படுத்தியுள்ள AIA தனது வாடிக்கையாளர்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் மற்றும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு உதவும் வகையில் கவர்ச்சிகரமான சலுகைகள் மற்றும் விலைக்கழிவுகளை வழங்கும் இலங்கையின் ஒரேயொரு காப்புறுதி வழங்குநராகவும் திகழ்கின்றது.

AIA இன்சூரன்ஸின் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி சசித் பம்பரதெனிய கருத்துத் தெரிவிக்கையில், ‘AIA சேவ்ஸ்மாட் என்பது மக்கள் மிகச்சிறந்த வாழ்க்கையினை வாழ்வதற்கு உதவும் எங்களின் வர்த்தகநாம நோக்கத்துடன் ஒன்றிணைந்துள்ள ஒரு புரட்சிகரமான காப்புறுதித் திட்டமாகும்.

இலங்கையர்களின் பல்வேறு நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி பெரிய கனவுகளை நனவாக்கவும், நம்பிக்கையுடன் அவர்களின் இலக்குகளை அடையவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தினை வழங்குவதிலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இலங்கையர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கை நிலைக்கு ஏற்ப புத்திசாதுர்யமான மற்றும் பரிபூரணமான சேமிப்புத் தீர்வை வழங்குகின்ற AIA சேவ்ஸ்மாட் தற்போது AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஊடாகவே கிடைக்கப் பெறுகின்றது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தகவல்களுக்கு AIA இன்சூரன்ஸ் நிறுவனத்தை 011 2310 310 ஊடாக அழையுங்கள்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division