27
மாதவன் நடிக்கும் படத்துக்கு ‘அதிர்ஷ்டசாலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்கியுள்ளார்.
மடோனா செபாஸ்டியன், ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன், மாத்யூ வர்கீஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு. ஃபேன்டசி டிராமா கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஏ.ஏ.மீடியா கார்ப்பரேஷன் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி, மனோஜ் முல்கி தயாரிக்கிறார்கள். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடந்துள்ளது. மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’!