கே. கணேஷ் எழுதிய சிறுகதைகள், கதைகள் அவரோடு நடத்திய நேர்காணல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் மொழிபெயர்த்த 22 நூல்கள் என எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து ஒரே நூலாக சிறந்த அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது.
இந் நிகழ்வு பி.பி.தேவராஜ் நிறுவகத்தின் தலைவர் பி.பி.தேவராஜின் நெறியாள்கையில் திருமதி ஜெயந்தி ஆனந்த் தலைமையில் கடந்த 27.10.2024 அன்று மாலை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியாஞ்சல் பாண்டே பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பிரமுகர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் மலையக மகளிர் மன்ற மாணவிகளான செல்விகள் பிரதிவிகா சுவேந்திரன், காயதிரி ஞானகுமார், ஜனனி ஞானகுமார் மற்றும் வருண் சந்திரன் ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
வரவேற்புரையை தொடர்ந்து திருமதி ஜெயந்தி ஆனந்த் தலைமையுரையும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை செல்வன் அவினாஷ் வேலாயுதமும் நிகழ்த்தினார்.
வாழ்த்துரைகளை பேராசிரியர் சபா. ஜெயராசா, சாகித்யரத்னா தி.ஞானசேகரன், சாகித்யரத்னா மு.சிவலிங்கம், கவிஞர் மேமன்கவி நிகழ்த்த, சிறப்புரையை பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் முனைவர் எம்.எம. ஜெயசீலன் நிகழ்த்தினார்.
திருமதி காயத்ரி சுவேந்திரனின் ஒருங்கிணைப்பில் கே.கணேஸ் எழுதிய நூல்களை டிஜிட்டல் விளக்கக்காட்சி காட்சிப்படுத்தப்படும்.
தொகுப்பாசிரியர் கே. பொன்னுத்துரை நூலினை வெளியிட்டார்.
நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சுயாதீன அறிவிப்பாளர் ஆர் பி. யசோதரை தொகுத்து வழங்கினார்.