கதிர்காமம் என்றால் தமிழ் முருகன் என்ற நினைவு வரும். அந்தக் கதிர்காமத்தை வரலாறு ஆக்கியவர்தான் பதுளை. வ. ஞானபண்டிதன்.
காலத்தால் அழிந்து போன அந்தப் புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதன் உண்மையான வரலாற்றோடு பதிப்பித்துள்ளார் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறைப் பேராசிரியர் செல்லத்துரை சுதர்சன். இந்த நூலினைப் பதிப்பிக்கும் பணியில் ஆர்வத்தோடு உழைத்த எழுத்தாளர் விக்கிரமசிங்க இந்த நூலை இலங்கைத் தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷம் என எழுதியுள்ளார். மறைந்து போன இந்த நூலின் எட்டாவது பதிப்பு தமிழக அரசால், அண்மையில் பழநியில் நடத்தப்பட்ட முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல் அரங்கில் வெளியிடப்பட்டு ஆயிரம் பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இப்போது திருத்திய இலங்கைப் பதிப்பு வெளிவந்துள்ளது. மலையகத்தின் தலைசிறந்த நூல்களை வெளியிடும் கலையொளி முத்தையாபிள்ளை அறக்கட்டளை இதனைப் பொறுப்பேற்று, பரமலிங்கத்தின் உதவியோடு வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தைத் தனது ஆய்வால், அறிவால் மெருகூட்டிய பேராசிரியர் சுதர்சனுக்கும் இந்த நூலைச் செம்மைப்படுத்திய பேராசிரியர் லண்டன் நித்தியானந்தனுக்கும் நன்றிகள்.
இந்த நூலில் இன்னும் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட உள்ளன.
எல்லாப் புகழும் முருகனுக்கே.