தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி, இந்தியாவில் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும், மேலும் மக்கள் அதை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். ஆனால் இந்த தீபத் திருவிழா இலங்கை, இந்தியாவில் மட்டுமின்றி, மற்ற சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?.
நேபாளம்: தீபாவளி நேபாளத்தில் திகார்(Tihar) என்று அழைக்கப்படுகிறது. இது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் போலவே நேபாளத்திலும் மக்கள் லட்சுமி மற்றும் விநாயகப் பெருமானை வணங்கி ஆசிகளைப் பெறுகிறார்கள். மேலும், முதல் நாளில் நேபாள மக்கள் பிரார்த்தனை செய்து பசுக்களுக்கு உணவளிக்கின்றனர். இரண்டாவது நாளில், நாய்களை கௌரவிப்பதற்காக குகுர் திகார் (Kukur Tihar) கொண்டாடுகிறார்கள். இந்நாளில் நாய்களை வணங்கி அவற்றிற்கு சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. மூன்றாவது நாளில், ராமரின் வெற்றி மற்றும் நாடு திரும்பியதைக் கொண்டாட மக்கள் தீபங்களை ஏற்றுகிறார்கள். மரணத்தின் கடவுளான யமனை நான்காவது நாளில் கொண்டாடி வழிபடுகிறார்கள். இறுதியாக, ஐந்தாவது நாளில், அவர்கள் இந்தியாவைப் போலவே பாய் தூஜ் கொண்டாடுகிறார்கள். பாய் தூஜ் என்பது, தீபாவளித் திருநாளை அடுத்த வளர்பிறை இரண்டாம் நாளன்று கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூர்: கணிசமான இந்திய மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூர், ஒவ்வோர் ஆண்டும் தீபாவளியின்போது ஒளிரும் பிரகாசமான விளக்குகள், வண்ணமயமான அலங்காரங்கள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் ஆகியவை பண்டிகைகளுக்கு சில நாட்களுக்கு முன்பே தயார்படுத்தப்படுகின்றன.
மொரிஷியஸ்: மொரிஷியஸில் கிட்டத்தட்ட 50% இந்து மக்கள் உள்ளனர். மேலும் அந்தநாட்டில் திருவிழா முழு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்கள் தங்கள் வீடுகளை ரங்கோலிகள் மற்றும் விளக்குகளால் அலங்கரித்து கொண்டாடுகிறா.
மலேசியா: மலேசியர்கள் தீபாவளியை ஹரி தீபாவளி (Hari Diwali) என்று அழைக்கின்றனர். தீபாவளி பண்டிகை தீவு முழுவதும் ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. மக்கள் விடியற்காலையில் எண்ணெய் குளித்து, தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, பூஜைகள் செய்து, பின்னர் கோயில்களுக்கு சென்று வருகின்றனர்.
பிஜி: பிஜியின் முக்கிய பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. இந்தோ-பிஜியன் மட்டுமின்றி, நாட்டில் உள்ள அனைத்து சமூகத்தினரும் இந்த பண்டிகையை பரவலாக கொண்டாடுகின்றனர். நாட்டின் முக்கிய நகரங்கள் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் சந்தைகளை நடத்துகின்றன.
தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் இருப்பதால், நாட்டில் தீபாவளி ஒரு முக்கிய பண்டிகையாக மாறியுள்ளது. மக்கள் தங்களுடைய வீடுகளில் ஏராளமான தீபங்களால் விளக்கேற்றுகிறார்கள்; பூஜைகள் செய்கிறார்கள்; கோயில்களுக்குச் செல்கிறார்கள்; கலாசார நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.
டிரினிடாட் (Trinidad) மற்றும் டொபாகோ (Tobago): கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல நல்ல உணவுகளுடன், டிரினிடாட் மற்றும் டொபாகோ தீபாவளியைக் கொண்டாடுகிறது. முழு கரீபியன் பிராந்தியத்திலும் மிகப்பெரிய கிழக்கிந்திய மக்கள் தொகை கொண்ட நாடு, அதனால்தான் அவர்கள் தீபாவளியை முழு உற்சாகத்துடன் கொண்டாடுகிறார்கள்.
கயானா (Guyana): தென் அமெரிக்க நாடான கயானா இந்து நாட்காட்டியின்படி தீபாவளியை முழு ஆர்வத்துடன் கொண்டாடுகிறது. 1980களில் முதன்முதலில் நாட்டில் கொண்டாடப்பட்ட இந்த திருவிழா, அதன் கலாசார பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டது. இந்தியாவைப் போலவே, தீபாவளியின்போது மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி இனிப்புகளை விநியோகிக்கிறார்கள்.