ஷொப்பிங் செய்பவர்கள் அதிகடிஜிட்டல் முறையில் செலவுகளை மேற்கொள்ளும்போது மோசடி செய்பவர்கள் நிதியியல் மோசடிகளால் பாதிக்கப்படக்கூடிய விற்பனை நிலையங்களின் விற்பனையாளர்களை தீவிரமாகத்தேடுகிறார்கள். வளர்ந்து வரும் டிஜிட்டல் கொடுப்பனவு மோசடிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் பயனர்களைக் கூட விட்டு வைக்காது வியப்பில் ஆழ்த்துகின்றன. ஒருமுறை இதில் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து எப்படி வெளியேறுவது? நீங்கள்ஏமாற்றப்பட்டால், விரைவாகச் செயல்படவும், ஆபத்தைக் குறைக்கவும் Visa வழங்கும் ஐந்து பயனுள்ள உதவிக் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் பராமரிப்பு சேவைகளை மட்டும் அழைக்கவும்: உங்கள் வங்கி அல்லது கட்டண வழங்குநரின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைப்பதில் நேரத்தை வீணடிக்காதீர்கள், அவர்களின் அதிகாரபூர்வ தகவல்கள் தொடர்பாக தொடர்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாக பட்டியலிடப்பட்ட தொடர்புகளை மட்டுமே நம்பி, உங்கள் கணக்கை முடக்கவும் அல்லது உங்கள் அட்டை/கட்டண முறையைத் தடுக்கவும். இது எந்த ஒரு மோசடி நடவடிக்கையையும் நிறுத்தவும் மற்றும் கட்டணம் மீளப்பெறுதல் அல்லது பணத்தை மீளப்பெறுதல் ஆகியவற்றைச் செயல்படுத்தவும் உதவும்.
தாமதமின்றி முறைப்பாடு செய்யவும்: உடனடியாக வங்கிக்குத் தகவல் தெரிவிக்கவும் மற்றும் 0112381045 அல்லது பொலிஸ் தலைமையகத்தில் (+94 12421111) பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குத் தெரிவிக்கவும். உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து அதன் நகலை கையில் வைத்துக் கொள்ளுங்கள்