கல்விமான் இர. சிவலிங்கத்தினால் அறிமுகப்படுத்தபட்ட ஒய்வுநிலை கல்விபணிப்பாளர் பீ. மரியதாஸ் எழுதிய மலையகம் இங்கிருந்து எங்கே? வரலாற்று ஆய்வு நூலின் மற்றும் ஒரு வெளியீட்டு விழா 26.10.2024 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இராகலை பாரதி கலை அரங்கத்தில் கவிஞர் மைபா தலைமையில் நடைபெறும். மலையகத்தின் சமூக அரசியல் செயற்பாட்டளர்களும் சிரேஷ்ட சட்டத்தரணிகளுமான S. தாயுமானவன், A.P. கணபதிப்பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
கலைஒளி முத்தையாபிள்ளை அறக்கட்டளையின் சார்பில் பேராசன் மு. நித்தியானந்தன் மற்றும் எச். எச். விக்கிரமசிங்க ஆகியோர் இந்நூலைப் பதிப்பித்துள்ளனர். நூல் பற்றி K. ராஜலிங்கம், P. ராஜதுரை, K. மெய்யநாதன் ஆகியோர் கருத்துரை வழங்க, அதிபர் N. நாகராஜ், S. சரவனபிரகாசம் ஆகியோர் நூல் விமர்சன உரையை ஆற்றுகின்றனர். பெ. அருள்மொழிசெல்வன் நூல் ஆசிரியரை அறிமுகம் செய்கிறார். வரவேற்புரையை S. ஜனார்த்தனும், ஏற்புரையை P. மரியதாஸும் வழங்க, நன்றியுரையை மணிவண்ணன் வழங்குகிறார்.