ஜனாதிபதி தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றியீட்டி ஜனாதியாக தெரிவு செய்யப்பட்டமைக்கு, இலஞ்சம், ஊழல், முறைக்கேடுகள் முற்றாக ஒழிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வியடங்களே ஆகும்.
அந்த அறைக்குள், இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், முறைக்கேடுகள் இடம்பெற்றமையை நாட்டு மக்களும் நன்கறிந்த விடயமும் கூட. எனவேதான் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த மக்களில் ஏறத்தாழ 43 சதவீத மக்கள் அநுர குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்து அவரை வெற்றியடையச் செய்துள்ளார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முன்னொரு காலத்தில் இடம்பெறாத விதத்தில் மிக அமைதியாக நடைபெற்றமை மகிழ்வுக்குரியது.
தற்போதைய ஜனாதிபதிதான் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததற்கிணங்க, வீண் விரயங்களை, ஊழல்கள், இலஞ்சம் ஆகியவற்றை ஒழிக்கும் விதத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளார். அவரின் இந்த செயற்பாடுகள் இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களையும் மகிழ்வுறச் செய்துள்ளது.
இந்த நாட்டில் இதுவரை காலமும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகமாக தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். முன்னாள் ஜனாதிபதியினால் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக 1700 ரூபா வழங்கப்படும் என தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட போதிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபாவே வழங்கப்படுகிறது. இந்த தொகை முன்னைய சம்பளத்தை விட 450 ரூபா மாத்திரமே அதிகம்.
தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அவர்களில் கணிசமான தொகையினர் தமது வாழ்க்கையை உரிய முறையில் திட்டமிடாதவர்களாக அல்லது திட்டமிடத் தெரியாதவர்களாக வாழ்வதனால்தான் அவர்களின் வாழ்க்கை துயரம் நிறைந்ததாக திகழ்கிறது.
இதேவேளை, கொவிட் 19 தொற்றினால் இந்த நாடு முடக்கப்பட்டு மீளவும் திறக்கப்பட்டபோது மலையக பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்கள் சாராய தவறணைகளுக்கு முன்பாக முண்டியடித்துக் கொண்டு, வரிசையில் நின்ற காட்சிகளை தொலைக்காட்சி செய்திகளினூடாக அறியக்கூடியதாக இருந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் தமது கடுமையான உழைப்பின் மூலம் ஏற்படும் உடல் அசதியைப் போக்க, வேறு மாற்று வழிகளை கைக்கொண்டிருந்தால், மதுவுக்கு செலவு செய்த பணத்தை மிகுதிப்படுத்தி அந்த பணத்தை தமது குடும்பங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம். எனவே, இனிவரும் காலங்களிலாவது தோட்டத் தொழிலாளர்கள் புதிய கோணத்தில் சிந்தித்து செயற்படவேண்டும். இந்த நாடு கொவிட் 19 கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த கால கட்டத்தில் கொழும்பு மாநகரில் அமைந்துள்ள பழக்கடைகள், உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சிற்றூழியர்களாக வேலை செய்த மலையக இளைஞர், யுவதிகள் உணவு கிடைக்காது மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக நடை பயணிகளாக தமது இருப்பிடங்களுக்கு மீளச் சென்றமையை செய்தி அறிக்கைகளினூடாக அறியக் கூடியதாக இருந்தது.
மலையக இளைஞர்கள், யுவதிகள் வாழும் மலையக பகுதிகளில் மரக்கறி பயிர்ச்செய்கை, பழவகை பயிர்செய்கை, மலர் வளர்ப்பு ஆகியவற்றிற்கு உகந்த வளமுள்ள காணிகள் இருக்கின்றன. அந்த காணிகளில் அந்தந்த சீதோஷ்ணத்துக்கேற்ப பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டால் அதிகளவு வருமானத்தை பெறமுடியும். ஏனைய நேரங்களில் சுய கைத்தொழில்கள், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு ஆகிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் அதிக வருமானத்தை தேடிக் கொள்ளமுடியும். தமது வீடுகளில் வசித்தவாறே வருமானத்தை தேடிக்கொண்டு சுதந்திரமாக வாழ முடியும். வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை.
உண்மை இதுவாக இருக்கும்போது, மலையக இளைஞர், யுவதிகள் மேலே குறிப்பிடப்பட்ட தொழில் முயற்சிகளை இழிவாக நினைத்து வெளி மாவட்டங்களிலுள்ள நகரங்களுக்குச் சென்று சிற்றூழியர்களாக தொழில் செய்கிறார்கள்.
இதனால் அவர்கள் உணவுக்கும், தங்குமிடங்களுக்கும் தமது வருமானத்தில் கணிசமான தொகையை செலவிடக்கூடிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.
எனவே, போதிய கல்வித் தகைமைகளை கொண்டிராத கல்வி கற்காத மலையக இளைஞர், யுவதிகள் எதிர்காலத்தில் கல்வி அறிவுக்காக தொழிலுக்காக அல்ல என புதிய கோணத்தில் சிந்தித்து தாம் வாழும் இடங்களிலேயே தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு சுதந்திர காற்றை சுவாசித்து நல்ல வருமானத்தை தேடிக்கொண்டு சுய கௌரவத்துடன் வாழ முற்படவேண்டும்.
மேலும், இந்த நாட்டிலுள்ள வட, கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகளுக்கு சென்று அவதானித்தால் தொழில் ரீதியாக வைத்தியர்கள் இயந்திரவல்லுநர்கள் (பொறியியலாளர்கள்) நில அளவையாளர்கள் மற்றும் உயர் பதவி வகிப்பவர்கள் தமது வயல் காணிகளில் இறங்கி வேலை செய்வதை அவதானிக்க முடியும்.
அவ்வாறானவர்களே இவ்வாறு செயற்படுகிறார்கள் எனில், நாம் எம்மாத்திரம் என மலையக இளைஞர்கள், யுவதிகள் இனியாவது சிந்தித்து செயற்படவேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் தமது வருமானத்தில் கணிசமான தொகையை அநாவசியமான வழிகளில் செலவு செய்கிறார்கள். வருமானம் கைக்கு கிடைத்ததும் அந்த வருமானத்தில் பெரும் பகுதியை மது, கைத்தொலைப்பேசிகளில் அழைப்பு எடுக்க உல்லாச பயணங்கள் செல்லல், ஆடம்பர பொருட்கள் கொள்வனவு செய்ய என அநாவசியமாக செலவு செய்கிறார்கள். இவ்வாறு செயற்படுவதனால் அவர்களின் வாழ்வு வறுமைக்கு முகங்கொடுப்பதுடன், கடனாளிகள் என்ற நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள். எனவே, மேற்குறிப்பிட்ட விடயங்களை கருத்திற்கொண்டு தோட்டத் தொழிலாளர்களும் அவர்களின் பிள்ளைகளும் எதிர்காலத்தில் உயர்ந்த நிலைக்குச் செல்லக்கூடிய விதத்தில் செயற்பட வேண்டும்.
மேலும், இம் மக்கள் மலையக அரசியல் கட்சிகளினால் அதிகளவு நன்மைகளை பெறவில்லை. மாறாக அரசியல் கட்சிகளை நம்பி ஏமாந்தமையே வரலாறு.
எனவே, எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில், இந் நாட்டில் இனத் துவேசம், ஊழல், இலஞ்சம், முறைகேடுகள் தொடர்ந்தும் இடம்பெறாத விதத்தில் எக் கட்சி செயற்பட முன் வருகிறதோ அக் கட்சிக்கு தமது முழுமையான ஆதரவை தருவதோடு, வாக்குரிமை மூலம் உறுதிப்படுத்தி அக் கட்சியை அரியாசனத்தில் அமர்த்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த மக்களில், ஏறத்தாழ 38 சதவீதத்தினர் வாக்களிக்கவில்லை. இதற்கு காரணம் என்னவெனில் இந்த நாடு சுதந்திரமடைந்த 76 ஆண்டு காலத்தில் எந்த அரசும் முறையாக செயற்படவில்லை என்ற மனப்போக்கே ஆகும். இந் நாட்டு அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் அமையாதமையும் காரணமாகும்.
இவதன்