காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன் என்ற பாட்டின் மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் தான் குட்டி ராதிகா. அந்த படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அந்த நடிகை திருமணம் செய்து கொண்டு, குழந்தையுடன் ஏகப்பட்ட சொத்துக்களை நிர்வாகித்துக்கொண்டு படு பிஸியான தொழிலதிபராக இருக்கிறார். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட குட்டி ராதிகா, ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதே, நீல மேக சியாமா என்ற கன்னடப்படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து கன்னடப்படத்தில் நடித்து வந்த இவர் 2003ம் ஆண்டு வெளிவந்த இயற்கை படத்தில் ஷாம், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் குட்டி ராதிகாவிற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இயற்கை படத்தைத் தொடர்ந்து, நடிகை ராதிகா. வர்ணஜாலம், உள்ளக்காதல், மீசை மாதவன் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். குட்டி ராதிகா: அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த இவர் திடீரென, சினிமாவை விட்டு விலகி 2000ம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, இவர்கள் இருவரும் சில நாட்கள் வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேற்பாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், 2002ம் ஆண்டு ரத்தன் குமார் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார். குட்டி ராதிகா விவாகரத்திற்கு பின்nவெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், திடீரென குழந்தையுடன் பெங்களூர் வந்தார். ரகசிய திருமணம்: அந்த குழந்தையின் தந்தை கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி என அதிர்ச்சியான தகவலை கூறினார். குமாரசாமி தன்னை 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறினார். மேலும், திருமணத்தைப் பற்றி வெளியில் தெரிந்தால் பிரச்சனை ஏற்படும் என்பதால் இத்தனை ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்து வந்ததாக அவர் கூறியிருந்தார். இந்த தகவலுக்கு குமாரசாமி எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஷாமிகா என்கிற மகள் இருக்கிறாள். பல கோடி பரிசு: சினிமா விட்டு விலகி குடும்பத்தை கவனித்துக்கொண்டு வந்த குட்டி ராதிகாவிற்கு, அவரது கணவர் குமாரசாமி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ‘சமயா’ என்ற பெயரில் இயங்கும் ஒரு சேனலை வாங்கி கொடுத்துள்ளார். பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த சேனலின் மதிப்பு மட்டும் ரூ.65 கோடியாகும். அந்த சேனலில் நிர்வாக இயக்குநராக குட்டி ராதிகா உள்ளார். இதுமட்டுமில்லாமல் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்சன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘அஜாக்ரதா’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
காதல் வந்தால் சொல்லி அனுப்பு உயிரோடு இருந்தால் வருகிறேன்
48
previous post