Home » மறையாத சூரியனை உருவாக்கிய கிராமம்

மறையாத சூரியனை உருவாக்கிய கிராமம்

by Damith Pushpika
October 6, 2024 6:55 am 0 comment

குளிர் காலத்தில் பாதுகாப்பு பெற ஒரு கிராமம் மறையாத சூரியனை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.

பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரியன் மிகவும் முக்கியமானது. கடும் குளிராக இருந்தால் அனைவரும் வெயில் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். குளிர் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க வெப்பமூட்டியை பயன்படுத்தலாம். எந்த ஒரு சாமானியனும் யோசிக்கக்கூட முடியாத ஒரு தீர்வை ஒரு கிராமம் கண்டுபிடித்துள்ளது. மறையாத செயற்கை சூரியன்தான் அந்த தீர்வு.

இத்தாலியில் உள்ள விக்னெல்லா கிராமம்தான் இந்த சாதனைக்கு சொந்தமான கிராமம். இது இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து இடையே உள்ளது. 13ஆம் நூற்றாண்டில் மக்கள் விக்னெல்லாவில் குடியேற ஆரம்பித்தனர். இங்கு நவம்பர் 11 முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரையில் சூரிய ஒளி மிக மிக குறைவாகவே இருக்கும். இந்த நாட்களில் விக்னெல்லா கிராமத்தில் இருந்தால் ஏதோ அந்தாட்டிக்காவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த கிராமத்தில் 200 பேர் வசிக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக, சூரியன் மறைந்து, இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தோன்றும் செயல்முறை இருந்து வருகிறது. 2005ஆம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி நிதி திரட்டப்பட்டு, ஊர் எதிரே உள்ள மலையில் பிரமாண்ட கண்ணாடி அமைக்கும் பணி தொடங்கியது. நவம்பர் 2006-இல், கிராம மக்கள் மலையின் மேல் 40 சதுர மீற்றர் கண்ணாடியை நிறுவினர். அதன் எடை 1.1 டன். இது 1100 மீற்றர் உயரத்தில் நிறுவப்பட்டது. குறைந்த அளவு சூரிய ஒளி உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது படும்போது அது ஒளியை எதிரொளிக்கும். இதன் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு விக்னெல்லா கிராமம் முழுமையாக சூரிய ஒளியை பெறத் தொடங்கியது. இப்பிரச்சினைக்கு அங்குள்ள மக்கள் தீர்வு கண்ட விதம், முழு உலகத்துக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division