வீடொன்றைக் கட்டுவதென்பது நாம் வாழ்வதற்கான இடத்தை தோற்றுவிப்பது மாத்திரமல்ல – அது சௌகரியம், அழகியல் மற்றும் நீண்ட கால பராமரிப்பிற்கான ஒரு முதலீடு. SLIIT Business School இன் துணை பீடாதிபதியான கலாநிதி மனோ வெலிகொடபொல, தரமான முடிவு வேலைப்பாடுகள் மற்றும் நிலைபேணத்தக்க பராமரிப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமையளிக்கின்ற ஒரு வீட்டு உரிமையாளர் என்ற வகையில் தனது தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கின்றார்.
இந்த நேர்காணலில், வீட்டின் நீண்ட கால உழைப்பு, துப்புரவு மற்றும் ஒட்டுமொத்த தோற்றத்தில் நீர்க்காப்பு பெயின்ட் வகைகள் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறித்த பெறுமதிமிக்க ஆழமான விடயங்களை அவர் வழங்கியுள்ளார்.
வீடொன்றைக் கட்டும் போது முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் யாவை?
எனது கணவரும், நானும் சேர்ந்து எமது கனவு இல்லத்தை கட்ட ஆரம்பித்த போது, நாம் விரும்பியவாறு வீட்டைக் கட்டி முடிப்பதற்கு கட்டடக்கலைஞரான எனது சகோதரியுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டோம். நாம் வீட்டைக் கட்டிய காணி முன்பு ஏரியாக இருந்தமையாலும், நிலம் பாறையாக இருந்தமையாலும் பாதுகாப்பான அத்திவாரமொன்றை இட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமான அம்சங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. நிலத்தின் கடந்தகால வரலாறு மற்றும் ஆபத்துக்களுக்கான வாய்ப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நீர்க்காப்பு என்பதற்கு நாம் முன்னுரிமையளித்ததுடன், புத்தம்புதிய தோற்றத்தை தொடர்ந்தும் பேணுவதிலும் கவனம் செலுத்தினோம்.
உங்களுடைய வீட்டின் நீடித்த உழைப்பு மற்றும் தோற்றம் ஆகிய இரண்டையும் பேண வேண்டியதன் முக்கியத்துவம் யாது?
நீண்ட கால சேமிப்புக்களைப் பொறுத்தவரையில் அவற்றின் நீடித்த உழைப்பினை உறுதி செய்வது மிகவும் முக்கியம். உங்களுடைய வீட்டின் மூலப்பொருட்கள் மற்றும் முடிவு வேலைப்பாடுகள் சிறந்த தரம் கொண்டவையாக இருப்பின், திருத்த வேலைகள் மற்றும் புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டிய தேவைகளுக்கு நீங்கள் அடிக்கடி செலவு செய்யத் தேவையில்லை. காலப்போக்கில் பராமரிப்புச் செலவுகளை குறைக்க உதவும் வகையில், எனது வீட்டில் அனைத்துமே நீண்ட காலம் உழைக்கும் தரம் கொண்டவையாக இருப்பதை உறுதி செய்வதில் நான் கவனம் செலுத்தினேன். அதேசமயம், வீட்டின் அழகியல் தோற்றத்தைப் பேணிப்பாதுகாப்பதும் இதற்கு ஈடாக முக்கியமானது. மிகவும் சிறப்பாக பேணிப் பராமரிக்கப்படுகின்ற வீடானது எக்காலத்திலும் நீடித்து நிலைபெறுவது மாத்திரமன்றி, அதன் அழகினை தொடர்ந்தும் பேணி, அதன் ஒட்டுமொத்த வசீகரம் மற்றும் கவர்ச்சியையும் மேம்படுத்துகின்றது.
உங்களுடைய வீட்டின் நீடித்து நிலைக்கும் அழகினை நீங்கள் பேணிவந்துள்ளீர்களா, அதனை அடைவதற்கு என்ன படிமுறைகளை மேற்கொண்டீர்கள்?
ஒரு வீட்டின் வெளித்தோற்றம் மிகவும் முக்கியமானது. பாரிய கட்டமைப்பைக் கொண்டிருப்பது என்பதன்றி, உங்களுடைய வீடு வரவேற்கத்தக்கதாகவும், அழகாகவும் இருத்தல் வேண்டும். எமது திறந்த கோட்பாடுடனான வடிவமைப்பு என்பது, மாறுகின்ற காலநிலைகளுக்கு வீடு முகங்கொடுக்க வேண்டியுள்ளதுடன், இது மேற்பரப்பு இலகுவாக சேதமடைவதற்கு வழிகோலுகின்றது. உயர்தரம் கொண்ட பெயின்ட் வகைகள் பிரகாசத்தையும், வர்ணத்தையும் பேண உதவுவதுடன், அடிக்கடி பெயின்ட் பூச வேண்டிய தேவையைக் குறைக்க உதவுகின்றது. அடிக்கடி பெயின்ட் பூசுவதற்கான செலவு மற்றும் நேரத்தையும் சேமிக்க உதவுகின்றது.
உங்களுடைய வீட்டுக்கு உயர் தர பாதுகாப்பளிக்கும் வெளிப்புற தயாரிப்புக்கள் மீது முதலீடு செய்வதால் கிட்டும் நீண்ட கால நன்மைகள் எவை?
நிலத்தின் கடந்த கால வரலாற்றைக் கருதுகையில், நீர்க்காப்பு என்பது உச்ச முன்னுரிமையாக காணப்பட்டது. நீண்டகால உத்தரவாதத்துடன், உயர் தரம் கொண்ட தயாரிப்புக்களை நாம் பயன்படுத்தியதுடன், பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் எவ்விதமான பிரச்சினைகளுக்கும் நாம் முகங்கொடுக்கவில்லை. ஆகவே எமது தெரிவு மிகுந்த பலனளித்துள்ளது. வீட்டின் புதிய தோற்றத்தை அவ்வாறே பேண உதவுவது இந்த முதலீடுகளின் மகத்தான அம்சமாகும். இத்தனை காலம் கடந்த பின்னரும் வீடு இன்னமும் புதிதாகவும், தற்காலத்திற்கு ஈடானதாகவும் காட்சியளிப்பதுடன், எவ்விதமான பாரிய திருத்தவேலைகளையோ அல்லது மாற்றங்களையோ மேற்கொள்ள வேண்டிய தேவை எமக்கு ஏற்படவில்லை.
வெளிப்புறச் சுவர்களில் பூஞ்சை படர்வதிலிருந்து உங்களுடைய வீட்டைப் பாதுகாப்பதற்கு நீங்கள் மேற்கொண்ட தடுப்பு ஏற்பாடுகள் எவை?
பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளுடன், விசேடமாக வடிவமைக்கப்பட்ட பெயின்டினை உபயோகிக்குமாறு எமது ஆலோசகர்கள் எமக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர். இந்த பெயின்ட் வகைகள் ஈரப்பதத்தைத் தடுக்க உதவுவது மாத்திரமன்றி, வெளிப்புற சுவர்களைப் பாதுகாத்து, காலம் காலமாக அவற்றைப் பாதுகாப்பாக பேணவும் உதவுகின்றது. முறையான காற்றோட்டம், குறிப்பாக குளியலறைகள் மற்றும் ஏனைய ஈரமான பகுதிகளில் அது முறையாக இருக்க வேண்டியது மற்றொரு முக்கியமான காரணி. நல்ல காற்றோட்டத்தை உறுதி செய்து, எந்தவொரு நீர்க்கசிவையும் உடனடியாக கவனித்து அதற்கான நடவடிக்கையை எடுத்தது எமது வீட்டை பூஞ்சையிலிருந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ள எமக்கு உதவியுள்ளது. கிரமமான அடிப்படையில் சுத்தப்படுத்தல் மற்றும் சிறு திருத்தவேலைகளைக் கூட உடனடியாக கவனித்தல் ஆகியனவும் பாரிய, செலவுமிக்க பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் நிலைமைகளை தவிர்ப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளன.
ஒரு வீட்டு உரிமையாளர் என்ற ரீதியில், இலங்கையிலுள்ள ஏனைய வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளைக் கட்டும் போது எதனைக் கருத்தில் கொள்ளத் தவறுகிறார்கள்?
நீங்கள் சுற்றிலும் அவதானித்தால், பல வீடுகளில் சுவர்கள் நிறம் மங்கியதாகவோ அல்லது பூஞ்சை மற்றும் வெடிப்புக்கள் கொண்டதாகவோ தோற்றமளிப்பதைக் காணலாம்.
இது உண்மையில் வீட்டின் அழகினைப் பாதிப்பதுடன், மக்கள் மலிவான மூலப்பொருட்களை நாடும் போது இவ்வாறு நேருவதை நான் கண்டுள்ளதுடன், நீண்ட காலத்தில் அவர்கள் அதைவிட அதிகமாக செலவு செய்ய நேரிடுகின்றது. உதாரணத்திற்கு, எமது வீட்டைக் கட்டும் பணிகளை நாம் முன்னெடுத்த போது நீண்ட கால உத்தரவாதம் கொண்ட உயர்தர நீர்க்காப்பு பெயின்ட் வகைகளை உபயோகிப்பதென நாம் முடிவு செய்தோம். பூஞ்சை அல்லது ஈரப்பதம் குறித்த எவ்விதமான பிரச்சினைகளுக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டி ஏற்படாமையாலும், சுவர்கள் இன்னமும் சிறப்பாக தோற்றமளிப்பதாலும் எமது தீர்மானம் வீண்போகவில்லை.
சிறந்த மூலப்பொருட்களுக்கு முற்கூட்டியே சற்று அதிகமாக செலவளிப்பது, காலப்போக்கில் அடிக்கடி முகங்கொடுக்க வேண்டிய திருத்த வேலைகள் மற்றும் சிறுசிறு பூச்சு வேலைகளைத் தவிர்த்து உங்களுடைய பணத்தைச் சேமிக்க உதவுகின்றது.