இயற்கையின் வண்ணமயமான மாயம் வானவில். மழைத்துளிகள் வழியாக சூரிய ஒளி கடந்து செல்லும்போது நிகழும் ஒரு அழகான இயற்கை நிகழ்வு. ஒளி வளைந்து அல்லது விலகி, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா மற்றும் வயலட் ஆகிய ஏழு வண்ணங்களாகப் பிரிந்து வானவில்லின் வளைவை உருவாக்குகின்றன.
ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு கோணத்தில் வளைவதால் வானவில் எப்போதும் ஒரே வண்ண வரிசையைப் பின்பற்றுகின்றன. நாம் பொதுவாக ஒரு வானவில்லின் பாதியை மட்டுமே பார்கின்றோம்.அவை உண்மையில் முழு வட்டங்களாக இருப்பினும் தரை கீழ் பாதியை மறைக்கிறது. அரிதான சந்தர்ப்பங்களில், இரட்டை வானவில் தோன்றும்.இது மழைத்துளிகளுக்குள் ஒளி இரண்டு முறை பிரதிபலிப்பதால் ஏற்படுகின்றன. இரண்டாவது வானவில் மங்கலானது. அதன் வண்ணங்களை தலைகீழ் வரிசையில் கொண்டுள்ளன. வானவில் என்பது இயற்கை உருவாக்கக்கூடிய அழகின் அற்புதமான நினைவூட்டலாகும். சூரிய ஒளியையும் தண்ணீரையும் ஒன்றாக இணைத்து வண்ணமயமான வானவில்லாக அனைவரும் இரசிக்கிறார்கள்.