44
விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்க இருக்கின்றார். அவரின் முதல் திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனை தொடர்ந்து அவர் இயக்கப்போகும் முதல் படத்தில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ் சினிமாவில் தளபதியாக ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார் விஜய். கடந்த 30 ஆண்டுகளாக பல போராட்டங்களையும் அவமானங்களையும் சந்தித்து இன்று இந்திய திரையுலகிலேயே உச்ச பட்ச நடிகராக இருக்கின்றார். அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மிகப்பெரிய இயக்குனர் என்பதால் விஜய்க்கும் சிறு வயது முதல் சினிமாவின் மீது ஆர்வம் வந்தது.