பங்களாதேஷின் இன்றைய நிலைமை அவலத்தில் உள்ளது. ஒருபுறம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் அன்றாட சீவியத்துக்ேக அல்லல்படுகின்றனர். மறுபுறம் மின்சாரம் இல்லாமல் அந்நாட்டின் பெரும்பகுதி இருளில் மூழ்கிக் கிடக்கின்றது.
இருவருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியை நினைவூட்டும் விதத்தில் பங்களாதேஷின் இன்றைய நிலைமை உள்ளது.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்த பின்னர் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட பல இடங்களில் தற்போதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் வங்கதேசம் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளதோடு, அந்நிய செலாவணி கையிருப்பு சரிவடைந்துள்ளது. அந்நாடு விரைவில் ‘திவால்’ ஆகிவிடும் ஆபத்து உள்ளது. இடைக்கால அரசுக்கு தலைவராக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கூட தொடர்ந்து அந்நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
வங்கதேசத்தின் நிலைமை இன்னுமே கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில் வங்கதேசம் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது.
இது வங்கதேசத்துக்கு கூடுதல் பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அந்நிய செலாவணி போதிய அளவில் கையில் இருந்ததால் பிறநாடுகளில் இருந்து தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாடு உள்ளது.
மக்கள் தங்களின் வங்கிக் கணக்கில் இருந்து அதிகபட்ச பணத்தை எடுக்க முடியது. ஒரு நேரத்தில் குறித்த தொகை பணத்தை மட்டுமே எடுக்க முடியும். இதனால் நாட்டின் வணிகத்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இடைக்கால அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகம்மது யூனுஸ் நாட்டில் நிலவும் பொருளாதார சிக்கலை தீர்த்துவைக்க முடியாமல் திண்டாடுகின்றார். அந்நாட்டின் தற்போதைய நிலை நீண்டகாலம் தொடரும் பட்சத்தில் அந்த நாடு பொருளாதாரத்தில் அதலபாதாளத்துக்குச் சென்று விடுமென்று அஞ்சப்படுகின்றது.
பொருளாதாரத்தை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுப்பதற்குப் பொருத்தமான தலைவர் ஒருவரே அந்நாட்டுக்கு தற்போது அவசியமென்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
வங்கதேசத்தை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்களில் முக்கியமானவை இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் தற்போதைய ஸ்திரமற்ற நிலைமையினால் ஏனைய நாடுகளில் இருந்து பங்களாதேஷுக்கு பொருட்கள் செல்வது குறைந்து விட்டது. இதனால் வங்கதேசம் தற்போது இக்கட்டான சூழலில் சிக்கி உள்ளது.
அரசாங்கத்தின் கையிருப்பில் போதிய நிதி இல்லாததால் பங்களாதேஷ் முழுவதும் இருளில் மூழ்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பங்களாதேஷுக்கு மின்சாரத்தை வழங்கும் அதானி நிறுவனத்திற்கு பெருந்தொகை டொலர்களை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. இதேவேளை ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியின் கீழ் பங்களாதேஷ் அரசாங்கம் செயற்பட்டு வந்தது.
நெருக்கடியான நிலையில் அவசரமாக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியத்திடம் பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கம் கோரியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியிருந்து போது, இலங்கைக்கு பங்களாதேஷ் கடனுதவி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது பங்களாதேஷின் நிலைமை பரிதாபமாக உள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷ் முழுவதும் இருளில் மூழ்கும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமக்குச் செலுத்த வேண்டிய சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதில் பங்களாதேஸின் இடைக்கால நிர்வாகம் தாமதம் காட்டி வருவதால் மின்சாரம் வழங்குவதில் இந்திய நிறுவனமான அதானி குழுமம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
எஸ்.சாரங்கன்