காரைக்கவியின் ‘சீத்துவக்கேடு, துலைஞ்சு போன எங்கட வாழ்க்கை’ எனும் நூல் வெளியீட்டு விழா இன்று செப்டெம்பர் 15ஆம் திகதி மாலை 4.31 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரன் தலைமை தாங்கி வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார். வாழ்த்துரையை பேராசிரியர் தை.தனராஜும், முகப்புரையை பேராசிரியர் வ.மகேஸ்வரனும், நயவுரையை வைத்தியர் செல்வரஞ்சனி சுப்ரமணியமும், ஆய்வுரையை பேராசிரியர் வ.சிவலோகதாசனும், நோக்குரையை கலாநிதி க.ரகுபரனும், மகிழுரையை சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திராவும், ஏற்று நன்றியுரையை நூலாசிரியரும் நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவர், சாகித்தியரத்னா தி.ஞானசேகரன், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் இ.சிவராஜா, புற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் ந.ஜெயகுமாரன், காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி மேனாள் ஆசிரியர் க.குகப்பிரியன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.