Home » ஜெயம் ரவி விவாகரத்து

ஜெயம் ரவி விவாகரத்து

by Damith Pushpika
September 15, 2024 6:05 am 0 comment

சினிமாவில் மிகவும் பிரபல நடிகராக வளம் வருபவர் நாயகன் ஜெயம் ரவி. தமிழ் பிரபல தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், எடிட்டர் மோகனின் மகனான நிதின் ஜெயம் ரவி, அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தாஸ், எம்.குமரன், தீபாவளி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, போகன், கோமாளி, பொன்னியின் செல்வன் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்து பிரதர் திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக தனது சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளார். ஆர்த்தி, ஜெயம்ரவி இருவரும் 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி மனைவி தனது இன்ஸ்டாகிராம் கணவர் ஜெயம்ரவியுடன் புகைப்படங்களும் டெலீட் செய்தது சர்ச்சையை கிளப்பியது. மேலும், ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாகி வைரலானது.

ஆனால் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி தரப்பில் இருந்து எந்த விதமான அதிகாரபூர்வ தகவல் வெளியாகாததால் அந்த செய்திகள் வதந்திதான் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜெயம் ரவி இன்று தந்து விவாகரத்து செய்தியை உறுதி செய்தது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக ஜெயம் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division