நடிகை விசித்ரா சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. 90களில் காலகட்டத்தில் கிளாமர் டான்ஸ் மற்றும் கவுண்டமணி செந்தில் காமெடிகளின் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் விசித்ரா.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக வயதுடையவர் சீசன் முடியும் வரை இருந்தார் என்றால் அது விசித்ரா மட்டும் தான்.
விசித்ராவின் நடவடிக்கைகள், தைரியமான பேச்சு போன்றவற்றிற்காக அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். பிக் பாஸ் டாஸ்க் ஒன்றின் போது போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை பற்றி பேசி இருந்தார்கள்.ரஜினி பொண்டாட்டி, பொண்ணுங்க கிட்ட போய் இத பத்தி கேளுங்க.. கொந்தளித்த நடிகை விசித்ரா .
அப்போது விசித்ரா தான் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் நடிகர் ஒருவர் தன்னிடம் அத்து மீறியதை பற்றி ரொம்ப தைரியமாக பேசியிருந்தார். இதனாலேயே அவருடைய தைரியம் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
சமீபத்தில் மலையாள சினிமா உலகை ஹேமா கமிட்டி அறிக்கை புரட்டி போட்டு இருக்கிறது. அதை பற்றி விசித்ராவிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்டிருந்தார்கள். அந்தப் பேட்டியில் ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி ரஜினியிடம் கேட்டபோது தனக்கு அதை பற்றி தெரியாது என்று சொன்னாரே, அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டிருந்தார்கள்.
இதற்கு பதில் அளித்த விசித்ரா இதை ஏன் நீங்க ரஜினி கிட்ட போய் கேக்குறீங்க, அவருடைய பொண்டாட்டி மற்றும் பொண்ணுங்க கிட்ட கேளுங்க. அவங்களுக்கு தான் இந்த விஷயத்தை பற்றி தெரியும் என பளிச்சென்று பதில் சொல்லி இருக்கிறார்.
அது மட்டும் இல்லாமல் பாதிக்கப்படும் போதே இந்த நடிகைகள் புகார் கொடுத்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் என்ன செய்தார்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு எதிராக ஒரு பெரிய ஹீரோ இப்படி செய்யும் பொழுது நான் நடிகர் சங்கத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தேன். ஆனால் அந்த நடிகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் விசித்ரா.